நாட்டை விரைவில் சிக்கலிருந்து மீட்டெடுக்க முடியும் : பிரதமர் நம்பிக்கை!

நாட்டை விரைவில் சிக்கலிருந்து மீட்டெடுக்க முடியும் : பிரதமர் நம்பிக்கை! ஐ.எம்.எப். ஊடாக மீண்டும் சர்வதேசத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நாட்டை விரைவில் சிக்கலிருந்து மீட்டெடுக்க முடியும் என்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று(வெள்ளிக்கிழமை) ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கடந்தாண்டு எமது அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தது. எமது நாட்டு மக்களும் இதனை மறந்திருக்க மாட்டார்கள். இந்த பிரச்சினைiயிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினார்கள். சர்வதேச நாணய நிதியத்தை இதற்காக நாடுமாறு பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கோரினார்கள். இதன் பலன் இன்று எமக்கு கிடைத்துள்ளது. 2.9 பில்லியன் டொலர் நிதியுதவி எமக்கு கிடைக்கவுள்ளது. ஐ.எம்.எப். இடம் செல்லது இது ஒன்றும் புதிதல்ல. நாம் 16 தடவைகள் ஐ.எம்.எப். இன் உதவியை நாடியுள்ளோம். இதனை இங்குள்ள பலர் மறந்துவிட்டார்கள். எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, விவசாயிகளுக்கு மீண்டும் விவசாயம்...