Posts

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை #Sri Lanka #Sri Lanka President Mayoorikka 1 hour ago ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை

Image
  ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை #Sri Lanka   #Sri Lanka President உறுதிபடுத்தப்பட்ட வேலைகள் இல்லாமல் ஓமானுக்குள் வரவேண்டாம் என்று ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஓமான் வெளியுறவு அமைச்சு மற்றும் அந்நாட்டு குடிவரவுத் திணைக்களம் ஆகியன இணைந்து அங்கு சிக்கியிருந்த 32 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளன.  இதுதொடர்பாக ஓமானில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதக் கடத்தல்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று இலங்கையர்களிடம் தெரிவித்துள்ளது.  மேலும், நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சுற்றுலா விசாவில் ஓமானுக்குள் நுழைந்ததுடன் பின்னர் சரியான வேலைவாய்ப்பைப் பெறாமல், விசா காலம் முடிந்த பின்னரும் ஓமானில் தங்கியிருந்த நிலையிலேயே திருப்பி அனுப்பப்பட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது கடந்த நவம்பர் மாதம் முதல் ஓமான் நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் அங்கு சிக்கியிருந்த 400 இக்கும் மேற்பட்ட இலங்கையர்களை திருப்பி அனுப்புவதற்கு வசதி செய்துள்ளதாக இலங்கை தூதரகம் குறிப்பிட...

ஆங்கில மொழிப் பாடத்தை வெற்றிகரமாக முடித்துள்ள 5 எம்பிக்கள்!

Image
  ஆங்கில மொழிப் பாடத்தை வெற்றிகரமாக முடித்துள்ள 5 எம்பிக்கள்! பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தேசிய மொழிப் பயிற்சி நிறுவனம் நடத்தும் ஆங்கில மொழிப் பாடத்தை ஐந்து பேர் மட்டுமே வெற்றிகரமாக முடித்துள்ளனர். இது தொடர்பான சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசியப்பட்டியல் எம்.பி, கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் எம்.பி., மற்றும் காலி, குருணாகல், மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆகியோர் இந்தப் பாடநெறியை வெற்றிகரமாக முடித்தவர்கள் ஆவர். ஆரம்பத்தில் 15 எம்.பி.க்கள் இதில் ஈடுபட்டிருந்த போதிலும், அது படிப்படியாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எம்.பி.க்களின் வசதிக்காக பாராளுமன்ற அமர்வு நாட்களில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. எம்.பி.க்கள் தவிர, 42 பாராளுமன்ற ஊழியர்களும் ஆங்கில மொழி பாடத்தில் பதிவு செய்யப்பட்டனர்.

யாழிலிருந்து வவுனியா சென்ற பேருந்துக்குள் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு

Image
 யாழிலிருந்து வவுனியா சென்ற பேருந்துக்குள் பரபரப்பை ஏற்படுத்திய பாம்புஅரச பேருத்தில் பயணிகளுடன் பாம்பு ஒன்றும் பயணம் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற பேருந்திலேயே இவ்வாறு பாம்பு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் இன்று (28) யாழில் இருந்து வவுனியா சென்ற அரச பேருந்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பேருந்தில் பாம்பை கண்ட பயணிகள் பதறியடுத்து அச்சம் கொண்டனர். அத்துடன் பேருந்தில் பாம்பு இர்ந்ததை அவதானிக்காது பயணிகளை ஏற்றிய நடத்துனர் மற்றும் சாரதி தொடர்பில் பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளது.

பிரான்ஸில் டைகர் நுளம்புகளிற்கு எதிரான நடவடிக்கை

Image
  பிரான்ஸில் டைகர் நுளம்புகளிற்கு எதிரான நடவடிக்கை #France   #Lanka4   #லங்கா4   #பிரான்ஸ் நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து, பரிஸ் புறநகரங்களில் இரவு நேர நடவடிக்கைகள் சில முன்னெடுக்கப்பட்டுள்ளன. 'டைகர்' நுளம்பு என அழைக்கபடும் ஆபத்தான நுளம்புகளினால் டெங்கு, சிக்கன்குன்யா, சிகா உள்ளிட்ட பல நோய்கள் பரவி வருகின்றது.  புறநகர் பரிசான Place de la Liberation (Saint-Mandé) இல் இந்த நுளம்புகளுக்கு எதிராக பூச்சிகொல்லி மருத்து அடிக்கும் பணி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. மருந்து தெளிக்கும் இயந்திரம் மூலம் வீதிகள் முழுவதும் இரவு நேரத்தில் இந்த பூச்சிகொல்லி மருந்து அடிக்கப்பட்டு உள்ளது.  நேற்று வியாழக்கிழமை இரவு முதற்கட்டமாக இப்படி இடம்பெற்றது. இதற்காக அப்பகுதியில் இரவு நேரத்தில் போக்குவரத்து தடைப்பட்டதாக அறிய முடிகிறது.

சுவிஸ் பெர்ன் இரயில் நிலையத்தில் இரு பெண்கள் மோதிக்கொண்டுள்ளனர்

Image
சுவிஸ் பெர்ன் இரயில் நிலையத்தில் இரு பெண்கள் மோதிக்கொண்டுள்ளனர் #Police   #Switzerland   #Women   #Attack   #Lanka4   #சுவிட்சர்லாந்து   #தாக்குதல்   #பொலிஸ்   #லங்கா4   #பெண்கள்   பெர்ன் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை பிற்பகல் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. "ஒரு பெண் ஒரு இளம் பெண்ணை கத்தியால் தாக்கினார்," என்று நேரில் பார்த்த ஒருவர் ஊடகத்தற்கு கூறினார்.  தலையிட விரும்பிய ஒரு வயதான பெண்மணியும் தாக்குதலால் காயமடைந்தார். ரயில் நிலையத்தில் பணிபுரியும் வாசகரின் கூற்றுப்படி, சிறுமி பதின்ம வயது மற்றும் குற்றவாளி 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர். நிலைய மண்டபத்தில் உள்ள சந்திப்புப் புள்ளி நண்பகலில் முற்றுகையிடப்பட்டது.  பெர்ன் மாநில காவல்துறையில் இருந்து சுமார் ஒரு டஜன் படைகள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் தளத்தில் இருந்தது. முதற்கட்ட கண்டுபிடிப்புகளின்படி, ஒரு பதின்ம சிறுமி பெர்ன் ரயில் நிலையத்தில் சந்திப்பு இடத்தில் இருந்தபோது, திடீரென ஒரு பெண்ணால் கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்தார். காயமடைந்த இளம் பெண்ணிற்கு உதவ ஒரு வயதான பெண்மணி விரைந்துள்...

35 பயணிகளுடன் விமான நிலையம் வந்த சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பிடித்தது

Image
  35 பயணிகளுடன் விமான நிலையம் வந்த சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பிடித்தது ! யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்தது. இச்சம்பவம் இன்று (24) அதிகாலை 4:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது. சம்பவம் குறித்து பஸ்ஸின் சாரதி கூறுகையில், புதன்கிழமை (23) இரவு எட்டு மணி அளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து 35 பயணிகளை ஏற்றுக் கொண்டு விமான நிலையம் நோக்கி புறப்பட்டோம். வியாழக்கிழமை (24) அதிகாலை 4.30 மணி அளவில் நீர்கொழும்பு தளுவகொட்டுவ பிரதேசத்தில் வைத்து திடீரென தீ பற்றி கொண்டதாகவும் உடனடியாக பஸ்ஸில் இருந்த பயணிகள் காப்பாற்றப்பட்டதுடன் வேறு வாகனங்களில் அவர்கள் விமான நிலையம் சென்றதாகவும் நீர்கொழும்பு தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுப்பாடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த தீ விபத்து காரணமாக பஸ் முற்றாக எரிந்து உள்ளது. பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. கொச்சிக்கடை பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள...

நாட்டின் நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு, 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்தது...!

Image
 நாட்டின் நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு, 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்தது...! நாட்டின் நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளாந்த அனல் மின் உற்பத்தி 30 வீதத்தில் இருந்து 64 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என மின்சார சபை தெரிவித்துள்ளார். நீர் மின் உற்பத்திக்கு போதுமான நீர் இல்லாமையே இதற்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.