Posts

மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பு !

Image
  மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பு ! சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.78 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.05 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.56 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை தனிப்பட்ட பணிகளுக்கு பயன்படுத்த இடமளிக்க வேண்டாம் !

Image
  பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை தனிப்பட்ட பணிகளுக்கு பயன்படுத்த இடமளிக்க வேண்டாம் ! பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை அந்த பிரமுகர்களின் தனிப்பட்ட பணிகளுக்கும் பயன்படுத்துவதற்கும் இடமளிக்க வேண்டாம் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் அது தொடர்பான பிரிவுகளுக்கு பொறுப்பான பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார். இதன்படி, உயரடுக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வேறு நடவடிக்கைகளில் ஈடுபடும் பட்சத்தில் அந்த அதிகாரி மற்றும் அவரது மேற்பார்வையில் உள்ள அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அறுகம்பை தாக்குதல் எச்சரிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கவலை !

Image
  அறுகம்பை தாக்குதல் எச்சரிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கவலை ! அறுகம்பை வளைகுடா பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளிக்கு எதிரான தாக்குதல் அச்சுறுத்தல்க குறித்து ஒக்‍டோபர் 07 ஆம் திகதி தகவல் கிடைத்த போதிலும், அரசாங்கம் செயற்படாமல் இருப்பது குறித்து முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ள முன்னாள் அமைச்சர், தாக்குதல் அச்சுறுத்தல்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அரசாங்கம் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு ஏன் விளக்கம் அளிக்கவில்லை. தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தலை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது, சுற்றுலா வருமானம் நாட்டின் மிக முக்கியமான வருமான ஆதாரங்களில் ஒன்றாகும். அரசாங்கத்திடம் முன்கூட்டியே தகவல் இருந்திருந்தால் மற்றும் இராஜதந்திர தூதரகங்களுக்கு அது தொடர்பில் விளக்கியிருந்தால், எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயண ஆலோசனை எச்சரிக்கையை தடுத்திருக்கலாம். அரசாங்கம் குறைந்தபட்சம் இப்போது இராஜதந்திர தூதரகங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்திற்க...

டயானா கமகேவின் கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு !

Image
  டயானா கமகேவின் கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு ! முன்னாள் அமைச்சர் டயானா கமகே வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்று, இலங்கையில் செல்லுபடியான விசாக்கள் இன்றி தங்கியிருந்தமை தொடர்பில் அவருக்கு எதிராக இரகசியப் பொலிஸாரால் சுமத்தப்பட்டுள்ள ஏழு வழக்குகளின் சாட்சிய விசாரணையை பெப்ரவரி 06 ஆம் திகதி கொழும்பு நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார் வழக்கின் விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன் டைன கமகேவின் சட்டத்தரணி சுகயீனம் காரணமாக மற்றுமொரு திகதியை வழங்குமாறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இவ்வாறு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாமல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை !

Image
  நாமல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை ! வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார். இன்று (24) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த போது ஊடகவியலாளர்கள் ஏன் இங்கு வருகை தந்தீர்கள் என்று கேட்கும் போது தனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார்.

மூன்று மாடி விற்பனை நிலைய கட்டிடம் ஒன்றில் தீ !

Image
  மூன்று மாடி விற்பனை நிலைய கட்டிடம் ஒன்றில் தீ ! மஹவெவ பிரதேசத்தில் உள்ள மூன்று மாடியைக் கொண்ட விற்பனை நிலைய கட்டிடம் ஒன்றில் நேற்று (23) இரவு தீ பரவியுள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடுவாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சிலாபம் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்சார கசிவு காரணமாக தீ ஏற்பட்டுருப்பதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது. தீ விபத்தினால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும், சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில் தகவல் வௌியாகவில்லை என்பதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடுவாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது !

Image
  வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது ! களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேக்கவத்தை பகுதியில் வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடிய சந்தேகநபர் ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை தெற்கு - தேக்கவத்த பகுதியை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபர் 'மிஹிகடவத்தே பக்கலா' என அழைக்கப்படுபவர் என தெரியவருகிறது. வாத்துவ, களுத்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள பொலிஸ் பிரிவுகளில் நீண்டகாலமாக வீடுகளுக்குள் புகுந்து திருடுவதாக களுத்துறை குற்றப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே களுத்துறை மிஹிகடவத்த பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பல வீடுகளில் திருடி தனியார் அடகுக் கடைகளுக்கு விற்பனை செய்திருந்த சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலும், குறித்த வீடுகளில் இருந்து திருடப்பட்ட பெறுமதியான 6 கையடக்க தொலைபேசிகள், கையடக்க தொலைபேசி துணைக்கருவிகள் மற்றும் இலத்...