பெண்ணிடம் செருப்பில் அடிவாங்கிய அமைச்சர் யார்?
இந்த சபையில் இருக்கும் அமைச்சர் ஒருவரை, பெண்ணொருவர் தன்னுடைய செருப்பை கழற்றி அடித்துள்ளார்
எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, அந்த அமைச்சர் யார்? என வினவினார்.
இதேவேளை, உயர்த்த ஞாயிறுத் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அடங்கிய உப-குழுவை, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஏற்கவில்லை.
அதேபோல, இந்த சபைக்குள் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்கள் உள்ளனர். அதனால்தான் தான், உப-குழுவை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால் சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்கள் யார், சித்தியடையாதவர்கள் யார் என்பது தொடர்பில் தகவல்களை தரவும் எனக் கேட்டுக்கொண்டார்.
Comments
Post a Comment