இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் தீவிரவாதத்தை ஆதரித்தவர்கள் அல்ல.
இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் தீவிரவாதத்தை ஆதரித்தவர்கள் அல்ல.
ஹஸ்பர் ஏ ஹலீம்_
தற்போதைய நீதி அமைச்சரின் கருத்தை பார்க்கின்ற போது சந்தோசமாக உள்ளது ஏனெனில் இந்த நாட்டில்
வாழ்கின்ற முஸ்லிம்களில் 99.9 வீதமானவர்கள் இந்த நாட்டுக்கு விசுவாசமுடையவர்களாக உள்ளார்கள் .ஒரு வீதமானவர்களே பயங்கரவாதம் ஐஸ் ஐஸ் என்பதுடன் தொடர்பு பட்டிருக்கலாம் இவ்வாறு இருக்க முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதத்துடன் ஒப்பிட வேண்டாம் என ஊடக வாயிலாக நீதியமைச்சர் கூறியுள்ளார் என முன்னால் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரும் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். கிண்ணியாவில் (22)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துரைக்கையில் பாராளுமன்றில் சமூக உரிமைகள் பற்றி பேச வேண்டும் யாழ் மேயர் மணிவண்ணன் கைது செய்யப்பட்ட போது கட்சி அமைப்புக்கள் இன்றிய பாகுபாடின்றி விக்னேஸ்வரன்,சம்மந்தன்,சுமந்தி ரன்,கஜேந்திரகுமார்,சுரேஷ் பிரேமசந்திரன் போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் அவரின் விடுதலைக்காக ஓங்கி ஒலித்தார்கள் அதே போன்று முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக ஓரணியில் நின்று ஓங்கி ஒலிக்க முஸ்லிம் அரசியல் தலைமைகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும் இது போன்று தவ்வா அமைப்புக்கள் நல்லதை செய்தார்கள் கிணறு குடிநீர் வீட்டு வசதிகள் என பல உதவிகளை முஸ்லிம் சிங்கள தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காகவும் நல்லதை செய்துள்ளார்கள் இவ்வாறாக தடை செய்துள்ளார்கள் இதனை கருத்திற்கொண்டு நாடாளுமன்றத்தில் வாய் மூடிகளாக மௌனமாக இருக்காமல் சமூக பிரச்சினைகள் பற்றி ஒன்று கூடி ஓரணியில் உரிமைகளுக்காக ஒன்றினைய வேண்டும் முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை விரும்புபவர்கள் அல்ல இஸ்லாத்தில் அடிப்படை வாதக்கொள்கைகள் இல்லை இப்படியாக பொதுபலசேன அமைப்பின் அத்தகொட ஞானசாரதேரர் கூறுவது அப்பட்டமான பொய் அப்பாவி முஸ்லிம்களை கொச்சைப்படுத்த நினைக்க வேண்டும் அரசுக்கு விசுவாசமாக ஒன்றினைந்து நாம் செயற்பட வேண்டும் தீவிரவாதத்துடன் ஒப்பிட்டு கோர்க்க நினைப்பவர்களை இணங்கண்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது தாய் மொழி தமிழாக இருந்தாலும் ஐந்து வயதில் இருந்து ஒரு பிள்ளை அறபி மொழியை தங்களது தொழுகைகளை நிறைவேற்றவும் அறபி மொழியை கற்பது குற்றமல்ல அறபி மொழியில் தான் குர்ஆனை கற்க வேண்டும் இதனை ஏன் தடுக்க வேண்டும் . ஆயிரம் வருடங்களாக வாழ்ந்த எம்மவர்களில் இது வரைக்கும் எந்தவிதமான பயங்கரவாதமோ எதுவுமோ மத்ரஸாக்களில் போதிக்கப்படவில்லை எந்த கெட்ட செயலும் இடம் பெறவில்லை அவ்வாறு இருந்தால் தான் நாங்கள் குற்றவாளிகள் மாறாக எதுவுமே எமது மார்க்கம் சொல்லவில்லை பயங்கரவாதம் இஸ்லாத்தில் இல்லை ஐஎஸ் ஐஎஸ் என்பது இஸ்லாமிய அமைப்போ அதில் இருப்போர் முஸ்லிம்களோ அல்ல பயங்கரவாதத்திற்கு நாம் ஒரு போதும் துணை போனதில்லை பத்து நாட்களில் சஹ்ரான் என்பவனை ஒழித்த நாம் பயங்கரவாதத்தினை காட்டிக்கொடுத்தே ஒழித்தோம் முப்பது வருட கால யுத்தத்தை நீங்கள் ஒழித்தீர்கள் எதிர்காலத்தில் ஒன்றினைந்து அரசோடு இணைந்து வாழ வேண்டும் என்று தெரிவித்த அவர் மீனவர்களின் நிலை தொடர்பிலும் இவ்வாறு மேலும் தெரிவித்தார்.
தற்பொழுது மீனவர்கள் மத்தியில் ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நாட்டினுடைய வடக்கு, கிழக்குப் பிரதேசத்தில் வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகத்தினுடைய உரிமையோடு சம்பந்தப்பட்ட விடயம் இது
மன்னார் தொடக்கம் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஒட்டு மொத்த சிறுபான்மைச் சமூகம் அனுபவிக்க வேண்டிய உரிமைகளை
கடந்த 50 வருடங்களுக்கு மேலாக அந்த மீனவர்கள் தமது தொழிலைச் சுதந்திரமாக செய்ய முடியாதளவுக்கு
பெரும்பான்மைச் சமூகத்தின் கெடுபிடிக்கும் மத்தியில் 5/6 நீளமான நிலப்பரப்பு சிறுபான்மைச் சமூகத் திற்குரியது (கடற்பரப்பு) அனுபவிப்பவர்கள் வடக்கு கிழக்கில் வாழும் பெரும்பான்மைச் சமூகமே அனுபவித்துக் கொண்டிருக்கிறது
எமது கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுதி வழங்குகின்ற போது எங்களுடைய மீனவர்கள் ஒன்றரை இஞ்சி வலையைப் பாவிக்க முடியாதளவுக்கு கெஸட் பண்ணப்பட்ட வலையைப் பாவிக்க முடியாதிருக்கிற போது அத்தகைய வலைகளைத் கொண்டு வடித்துச் செல்கின்றார்கள் இதனால் எமது மீன் உற்பத்தி குறைகின்றது.
கேரளாவில் - தமிழ்நாட்டுக்கரையோர மீனவர்கள் மூன்று மாதங்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதக் கப்பட்டுள்ளது. மீன்கள் இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக.
இப்டிப்பட்ட நிடையில் இந்திய மீனவர்கள் வடபுலத்தில் மீன் பிடித்த அனுமதிப் என்பது எமது பிரதேசத்தில் பெரும்பான்மைச் சமூகத்தின் கெடுபிடிகள் இருக்கும் போது சிறுபான்மை மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் இந்திய மீனவர்களால்
ஆக வே மீனவர்கள் மீதான நம்பிக்கையை எமது மீன்பிடி அமைச்சர் ஏற்படுத்துவார் என நினைக்கிறேன் என்றார்.
Comments
Post a Comment