இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிறுமி மர்யம், ஐக்கிய இராஜ்ஜியத்தின் "அதி சிறந்த அல் குர்ஆன் காரியாவாக " மகுடம் சூட்டினார்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிறுமி மர்யம், ஐக்கிய இராஜ்ஜியத்தின் "அதி சிறந்த அல் குர்ஆன் காரியாவாக " மகுடம் சூட்டினார்.
ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள பழமை வாய்ந்ததும் பிரபலமானதுமான இஸ்லாமிய தொலைக்காட்சி
சேவைகளில் ஒன்றான "இஸ்லாம் சனல் டீவி" கடந்த 15 வருடங்களாக தொடராக நடாத்தி வரும் தேசிய ரீதியிலான "அல் குர்ஆன் கிராஅத் போட்டி" நிகழ்ச்சித் தொடரில் முதல் தடவையாக கலந்து கொண்டு முதலிடத்தைப் பெற்று 2021 ஆம் ஆண்டின் ஐக்கிய இராஜ்ஜியத்தின் "அதி சிறந்த அல் குர்ஆன் காரியாவாக "இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒன்பது வயது மர்யம் ஜெஸீம் மகுடம் சூட்டப்பட்டார்.
ஐக்கிய இராஜ்ஜியத்தில் பிரபலமான இப்போட்டி நிகழ்ச்சியில் 6- தொடக்கம் 14வயதுடைய நூற்றுக் கணக்கான போட்டியாளர்கள் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பாகங்களிலிருந்தும் கலந்து கொண்டிருந்தனர் .
ஒன்பது வயதுடைய மர்யம் ஜெஸீம் இங்கிலாந்தின் இஸ்லாம் சனல் தொலைக்காட்சி வழங்கும் இச் சிறப்பு மகுடத்தை அதி குறைந்த வயதில் வென்ற, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட முதலாவது சிறுமியாகவும் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மர்யம் ஜெஸீம், கட்டார் ஸ்கை தமிழின் ஆலோசகராக விளங்கும் ஜெஸீம் எ. ஹமீத் அவர்களின் புதல்வி ஆவார்.
போட்டி ஒன்றில் பதிவான மர்யம் ஜெஸீம் அல் குர்ஆன் ஓதும் காணொளி.
Comments
Post a Comment