எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீக்கிரையானதால் இலங்கை கடற்பரப்புக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்ட ஈடாக 720 மில்லியன் ரூபாவை வழங்க கப்பலின் காப்புறுதி நிறுவனம் இணக்கம்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீக்கிரையானதால் இலங்கை கடற்பரப்புக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்ட ஈடாக 720 மில்லியன் ரூபாவை வழங்க கப்பலின் காப்புறுதி நிறுவனம் இணக்கம்.
இலங்கை கடற்பரப்பில் தீக்கிரையான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலால் சமுத்திர சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய, இந்தியாவின் விசேட கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
நேற்று (25) இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் ஊடாக இலங்கை கடற்பரப்புக்கு ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இந்நாட்டுக்கு நட்டஈட்டுத் தொகையாக 720 மில்லியன் ரூபா கணக்கிடப்பட்டுள்ளது.
குறித்த தொகையை கப்பலின் காப்புறுதி நிறுவனம் வழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
Comments
Post a Comment