இலங்கை கொரோனா தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யும் முறைமைக்கு உலக வங்கி பாராட்டு
இலங்கை கொரோனா தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யும் முறைமைக்கு உலக வங்கி பாராட்டு
கொரோனா தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதில் இலங்கை பின்பற்றும் முறைமை தொடர்பாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
நேற்று (25) ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா கட்டுப்பாட்டு விசேட செயலணி, கூடிய போதே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளை கொள்வனவின் போது பின்பற்றப்படும் வெளிப்படைத்தன்மை போன்ற விடயங்கள், தெற்காசிய நாடுகளில் உள்ள ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் முன்னிலையில் காணப்படுவதாக உலக வங்கி அடையாளப்படுத்தியுள்ளது.
எனவே தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யும் போது, உலக வங்கியின் இணையத்தளத்தின் ஊடாகக் கொடுப்பனவுகளை செய்வதற்கான வாய்ப்பு, இலங்கைக்குக் கிடைத்துள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன மேலும் குறிப்பிட்டார்.
Siva Ramasamy
Comments
Post a Comment