ரிசாத் பதியூதின் வீட்டில் எனது மகளுக்கு பல துன்பங்கள் நேர்ந்துள்ளது.

 ரிசாத் பதியூதின் வீட்டில் எனது மகளுக்கு பல துன்பங்கள் நேர்ந்துள்ளது.

 


பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் வேலை செய்த நிலையில் உயிரிழந்த தனது மகளிற்கு

இஷாலினிக்கு நீதி வேண்டும் என கோரி அவரது பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.


தனது மகள் ஒருபோதும் தீ வைத்து தற்கொலை செய்திருக்க மாட்டாள் என தான் நம்புவதாக டயகம சிறுமியின் தாயான ராஜமாணிக்கம் ரஞ்சனி தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் வீட்டில் தனது மகளுக்கு பல துன்பங்கள் நேர்ந்ததாக அவர் கூறியுள்ளார்.


அத்துடன் பிரேத பரிசோதனை செய்தது இஸ்லாமியர் ஒருவர் என்பதால் அதில் தனக்கு நம்பிக்கை இல்லை எனவும் அதனால் சடலத்தின் மீது மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தாய் கேட்டுக் கொண்டுள்ளார்.


மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !