மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்குச் சட்டத்தை நீடிக்க அரசு ஆலோசனை.
மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்குச் சட்டத்தை நீடிக்க அரசு ஆலோசனை.
நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப் படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் 30ஆம் திகதியுடன் முடிவுறுத்தாமல் அடுத்த மாதம் 6ஆம் திகதிவரை அதாவது மேலதிக ஒருவார காலத்திற்கு நீடிக்குமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து அரசு ஆலோசித்து வருகிறது.
தற்போது அமுலிலுள்ள பொதுமுடக்கத் துடன் கூடிய ஊரடங்கு வெறுமனே 10 நாட்களுக்கு மட்டுமே அமுலில் இருப்ப தாலும் கொரோளா நோயாளர்களின் எண் ணிக்கை மற்றும்... வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க அரசு ஆலோசித்து வருகின்றது.
அத்துடன், அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் மரண வீதம் தொடர்ந்தும் அதிகரிப் பதாலும் குறைந்தபட்சம் மேலும் ஒரு வார காலத்திற்காவது முடக்கத்தை தொடர வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும் நாளை வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளதால் அதில் இந்த விடயங்களை ஆராய்ந்து இறுதி முடிவை எடுக்க அரச உயர்மட்டத்தில்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாட்டை தொடர்ந்து முடக்காமல், ஏற்கனவே அறிவித்தபடி எதிர்வரும் 30ஆம் திகதி திறக்குமாறு அரசின் மூத்த அமைச்சர்கள் பலர் அரச உயர்மட்டத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
Comments
Post a Comment