ஆத்மார்த்த அனுபவத்தைப் பருக வாருங்கள்.

 இலங்கையின் அழகை ரசிக்கும் ஆத்மார்த்த அனுபவத்தைப் பருக வாருங்கள்.

 


இலங்கையின் அழகை ரசிக்கும் ஆத்மார்த்த

அனுபவத்தைப்

பருக உலக

சுற்றுலாப்பயணிகளுக்கு

ஜனாதிபதி கோட்டாபய

ராஜபக்ஷ அழைப்பு

விடுத்துள்ளதோடு, உலக சுற்றுலாப்பயணிகளின் கவனம் இலங்கையை

நோக்கி தற்போது அதிகரித்துள்ளதாகவும்

தெரிவித்தார்.


உலக சுற்றுலா தினமான

நேற்று (27) ஜனாதிபதி

இவ்வாறு அழைப்பு

விடுத்திருந்ததோடு,

பண்டைய காலம் தொடக்கம்

இன்றுவரை, இலங்கையானது

- வரலாறு, பாரம்பரியம்,

சுற்றுச்சூழல் மற்றும்

சிறந்த காலநிலைகளைக்

கொண்டதான சுற்றுலாத்

தீவாக இருந்து வருவதையும்

அவர் சுட்டிக்காட்டினார்.

சுற்றுலாத்துறையானது,

நாட்டுக்குப் பல்வேறு

சேவைகளை வழங்குவதன்

மூலம் பெரும் அந்நியச்

செலவாணியை வாரி

வழங்குகினாலும், கொவிட்-

19 தொற்று காரணமாக அது பாரியளவில் இப்போது

செயற்படாமல் இருக்கின்றது

எனவும் தெரிவித்தார்.

எனினும், உலகில் பல

நாடுகள் பயணங்களுக்கான

அனுமதியை வழங்கி வரும்

இவ்வேளையில், உலகச்

சுற்றுலாப் பயணிகளின்

கவனம் இலங்கையை நோக்கி தற்போது அதிகரித்துள்ளது.



எனவே, இலங்கையின்

சுற்றுலாத் துறையை மீண்டும்

வளர்த்தெடுப்பதற்காக

அரசாங்கம் தனிமைப்படுத்தல்

விதிகளின்படி அனைத்து

நடவடிக்கைகளையும் எடுத்து

வருகிறது எனவும் ஜனாதிபதி

மேலும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !