அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.
அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.
அம்பாறை மாவட் டத்தில் சேதனப் பசளையைப் பாவித்து
அப்பிள் பழங்களை உற்பத்தி செய்யலாம் என்பதை அட்டாளைச்சேனையில் ஓய்வுபெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோ கஸ்தர் ஏ.எல். அப்துல் கபூர் நிரூபித்துள்ளார்.
அட்டாளைச்சேனையிலுள்ள குடி யிருப்பு நிலமொன்றில் "மாசான்" எனும் அப்பிள் கொடியை நாட்டி யுள்ளார். அத்துடன் உப உணவுப் பயிர்ச்செய்கை, வீட்டு மட்டதிலான கால்நடை வளர்ப்பு, சிறுசிறு மரக்கறிப்பயிர்ச் செய்கை போன்றவைக ளிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.
சுபீட்சத்தின் நோக்கு எண்ணக் கருவுக்கு அமைவாக “சேதனப் பசளையை பாவிப்பதன்மூலம் "நஞ் சற்ற உணவை உட்கொள்வோம்" என்ற தொனிப் பொருளால் மிகவும் கவரப்பட்டகபூர், தனதுமுயற்சி புது மையானதாக இருக்கவேண்டுமென நினைத்தார்.
அவ்வாறே "மாசான்" எனும் ஒருவகை அப்பிள் மரக்கன்றுகள் சிலவற்றை நாட்டினார். தற்போது அப்பிள் மரம் பழங்களைக் காய்க்க தொடங்கியது. கடந்த திங்கட்கி ழமை இவர் ஒரு மரத்தில் மாத்திரம் சுமார் 75 க்கு மேற்பட்ட காய்களைப் பறித்துள்ளார்.
இதேவேளை இவர் சிறந்த வாச னைத்திரவியங்களை உற்பத்திசெய் வதற்கு மூலப்பொருளாகப் பாவிக் கப்படும் "வல்லப்பட்டை என்று அழைக்கப்படும் "Agar Wood" மரத்தையும் நட்டு பராமரித்து வரு கின்றார்.
இம்மரங்களை அரசாங்கத் தினால் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் பட்ட தனியார் கம்பனி ஒன்றோடு கைச்சாத்திட்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக பராமரித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்க்கது.
Comments
Post a Comment