நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுக்கவுள்ளோம்

 நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுக்கவுள்ளோம்

 


நவம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில்

 பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.


அந்தச் சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இதனைத் தெரிவித்துள்ளார்.


கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு வழங்கும் உடன்படிக்கையினை மீளப்பெறுமாறு தெரிவித்து குறித்த பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்தோடு, நாளைய தினம் இலங்கை மின்சார சபையின் சகல சேவையாளர்களும் வீதியில் இறங்கி போராடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.


இதன்படி, பதுளை, திருகோணமலை, குளியாப்பிட்டி, குருநாகல், அநுராதபுரம், கேகாலை, காலி, இரத்தினபுரி மற்றும் கிரிபத்கொடை உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !