இன்று பகல் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததில் ஒருவர் காயம்.

 இன்று பகல் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததில் ஒருவர் காயம்.



சிவனொளிபாத மலை ஹட்டன் வீதியில் எஹலக்கனுவ பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் பணிபுரியும்

இளைஞர் ஒருவர் சமையல்  எரிவாயு அடுப்பு  வெடித்ததில் காயமடைந்த நிலையில் மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நல்லத்னிய பொலிஸார் தெரிவித்துள்ளனா்.


இன்று (23) பிற்பகல் 12.30 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்துடன் குறித்த உணவகத்திலுள்ள ஏனைய  ஊழியர்கள் காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனா்.


காயங்களுக்குள்ளானவர் இரத்தினபுரி, குருவிட்ட, படதொட்ட பிரதேசத்தை சேர்ந்தவர் 18 வயதுடையவர்  எனவும், அவர் தொர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனா்.


இவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக  மாவட்ட வைத்திய அதிகாரி எச். இர்ஜாட் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !