#நிந்தவூர் பிரதான வீதியில் எரிபொருள் பவுசர் ஒன்றுடன் ஆட்டோ விபத்துக்குள்ளானதில் சிறுமி உட்பட நால்வர் பலத்த காயமடைந்துள்ளனர் !!

 #நிந்தவூர் பிரதான வீதியில்  எரிபொருள் பவுசர் ஒன்றுடன் ஆட்டோ விபத்துக்குள்ளானதில்  சிறுமி உட்பட நால்வர் பலத்த காயமடைந்துள்ளனர் !!




நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில்  எரிபொருள் பவுசர் ஒன்றுடன் ஆட்டோ மோதியுள்ளது.


இந்த சம்பவம் இரவு சுமார் 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


அக்கரைப்பற்றில் இருந்து சம்மாந்துறை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்று கொண்டிருந்த எரிபொருள் பவுசரும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


இதன்போது  முச்சக்கர வண்டி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த சிறுமி உட்பட நால்வர் பலத்த காயங்களுக்குள்ளாகி நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது...

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !