அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – பிரதமர்

 அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – பிரதமர்



எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.


வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த சம்பள உயர்வு அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலும் பட்ஜெட் உரையின் போது தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வுக்கான கோரிக்கையை பிரதமர் விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதேவேளை, சம்பள உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பட்ஜெட் தயாரிக்கும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.


2015 அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !