எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் பாதுகாப்பிற்கு மேலதிகமாக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை

 

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் பாதுகாப்பிற்கு மேலதிகமாக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை


எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மேலதிகமாக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பல எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் தற்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

தற்போது பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்படுகின்ற மோதல் நிலைமையை தவிர்ப்பதற்காக இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், அனுராதபுரத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரின் வீட்டின் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

அவரது வீட்டை தாக்குவதால் எரிபொருள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமாக செயற்பாடாகும் எனவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !