மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவலர்கள் அதிகார சபை அதிகாரிகள் விசேட சுற்றி வளைப்பு!

 மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவலர்கள் அதிகார சபை அதிகாரிகள் விசேட சுற்றி வளைப்பு!


(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவலர்கள் அதிகார சபை அதிகாரிகள் நேற்று மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் விசேட சுற்றி வளைப்பு மேற்கொண்டிருந்தனர்.

அந்த வகையில் அரசாங்கத்தினால் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வெள்ளை முட்டை ரூபாய் 43 சிவப்பு முட்டை ரூபாய் 45 அரசாங்கத்தினால் உயர்ந்த பட்ச கட்டுப்பாட்டு விலையாக விதிக்கப்பட்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் அரச கட்டுப்பாட்டு விலைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முட்டைகள் விற்பனை செய்ய படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மாவட்ட அரசாங்க அதிபர் கே கருணாகரன் கிடைத்த முறை பாட்டின் அடிப்படையில் அவரின் வழிகாட்டலின் கீழ் 24. 08.2022 நேற்றைய தினம் மட்டக்களப்பு நகரம் மட்டக்களப்பு சந்தை மற்றும் ஏறாவூர் பிரதேசம் ஏறாவூர் சந்தை விசாரணை சுற்று வளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வகையில் அரச கட்டுப்பாட்டு விலையிடை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த வியாபாரிகள் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பல வியாபாரிகளுக்கு அறிவுரைகளும் எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டிருந்தது இருப்பினும் மாவட்டத்தில் அரச கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்கின்ற வியாபாரிகள் தொடர்பாக மட்டக்களப்பாப்பு மாவட்டம் பூராவும் சுற்றுவழிப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதினால் முட்டை வியாபாரம் செய்கின்ற வியாபாரிகள் அரச கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வதாக இருந்தால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக குறைந்தது ஒரு லட்சம் தொடக்கம் 5 லட்சம் ரூபா வரை தண்ட பணம் விதிக்க முடியும் என்றும் ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்றும் நுகர்வோர் அலுவலக சம்பந்தமான அதிகார சபை மாவட்ட உதவி படிப்பாளர் ஆர் எப் ஏ அன்வர் சதாத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட பூராகவும் சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் முட்டை வியாபாரம் செய்கின்ற வியாபாரிகள் அரச கட்டுப்பாட்டு விலைக்கு அமைவாக விற்பனை செய்ய வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !