8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது !

 

8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது !


8 வயது சிறுமியை பல சந்தர்ப்பங்களில் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தாயாரினை இரண்டாவது திருமணம் செய்த கணவரையே கைது செய்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

மொரட்டுவ, ராவத்தவத்தை, பொல்கொடுவ வீதியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் சமிந்த குமார (44) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி மாலை ஆங்கில வகுப்புக்கு சென்றபோது, ​​உடலில் கடுமையான வலி இருப்பதாக ஆங்கில ஆசிரியரிடம் கூறியுள்ளார்.

அதன்படி, ஆசிரியர் இது குறித்து தாயாரிடம் தெரிவித்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறினார்.

பின்னர், சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்த தாய், நோய்க்கான காரணங்களை கேட்டறிந்த போது சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (21) மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !