Posts

Showing posts from October, 2022

இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணைகள் இன்றுடன் நிறைவு!

Image
  இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணைகள் இன்றுடன் நிறைவு! நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணை இன்று நிறைவடையவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டறிய விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களின் பிறந்தநாள் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கங்களை கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் கோரியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு, குடிவரவுத் திணைக்களம் உரிய பட்டியல்களைச் சரிபார்க்கத் தொடங்கியுள்ளது. எவ்வாறாயினும் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று இறுதித் தீர்மானத்தை வழங்க முடியும் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் கல்வி முறையை மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது - கல்வி அமைச்சர்

Image
  சிறிலங்காவின் கல்வி முறையை மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது - கல்வி அமைச்சர் சிறிலங்காவின் கல்வி முறையை மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி முறையில் மாற்றம் தொடர்பான திருத்தங்களை 6 பகுதிகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம். கல்வி சீர்திருத்தத்தை முன்னெடுப்பதை விட, இன்று நாம் மாற்றத்திற்கு செல்ல வேண்டும். அந்த வகையில் கல்வி முறை மாற்றத்தை 6 பாகங்களாக திட்டமிட்டுள்ளோம். அதை முதலில் தொடங்க உள்ளோம். எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் நிர்வாகத்தில் கல்வி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில், நாம் திறனை வளர்த்துக் கொள்ள முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

கடுமையான பொருளாதார அழுத்தத்திற்கு உள்ளான மக்கள் மீது அதிக வரிகளை சுமத்த வேண்டாம் - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ

Image
  கடுமையான பொருளாதார அழுத்தத்திற்கு உள்ளான மக்கள் மீது அதிக வரிகளை சுமத்த வேண்டாம் - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடுமையான பொருளாதார அழுத்தத்திற்கு உள்ளான மக்கள் மீது அதிக வரிகளை சுமத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் மீது வரி அல்லது கட்டணச் சுமைகளை சுமத்துவதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்கள் மீது எத்தனை புதிய வரிகள் விதிக்கப்பட்டாலும் அவற்றை வசூலிப்பது இலகுவானதல்ல என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, இவ்வாறான பிரேரணையை அரசியல் ரீதியாக ஆதரிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் உற்பத்தி செயல்முறையை ஊக்குவிப்பதன் மூலம் வருமானத்தை அதிகரிக்காமல் என அவர் கூறியுள்ளார். அதிக வரிகளையோ கட்டணங்களையோ மக்கள் மீது சுமத்துவது நடைமுறைச் செயல் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார்

Image
  தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நேற்று (30) யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநரின் செயலாளர் வாகீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கலந்துரையாடடில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசிகள் கைதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள 34 பேரையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டியே பின்பற்றி வருகிறோம். அண்மையில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் தடுத்துவைக்கப்பட்டு உள்ளவர்களின் வழக்கு நிலைமைகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் தொடர்ந்து கலந்துரையாடி விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   குறித்த சந்திப்பில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசிகள் கைதிகள் அண்...

15 வயது சிறுமியை திருமணம் செய்து தலைமறைவான 20 வயதான இளைஞன் கைது !

Image
  15 வயது சிறுமியை திருமணம் செய்து தலைமறைவான 20 வயதான இளைஞன் கைது ! 15 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு தலைமறைவான பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த 20 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பாிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். குறித்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, பிரான்ஸில் வசிக்கும் கல்விங்காட்டை சோ்ந்த 20 வயதான இளைஞன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னா் யாழ்ப்பாணம் வந்துள்ளாா். பின்னா் அச்சுவேலி பகுதியை சோ்ந்த 15 வயதான சிறுமியுடன் காதல் உருவான நிலையில் சிறுமியை திருமணம் முடித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளாா். இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனடிப்படையில் அச்சுவேலி பொலிஸாரால், காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் கவனத்திற்கு குறித்த முறைப்பாடு கொண்டு செல்லப்பட்டது. அதனடிப்படையில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர், சிறுமியையும் குறித்த இளைஞனையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனை அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ...

இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகள் கொள்முதல் : சுகாதார அமைச்சு !

Image
  இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகள் கொள்முதல் : சுகாதார அமைச்சு ! நாட்டில் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகள் உட்பட 1,300 வகையான மருந்துகளுக்கான கொள்முதல் உத்தரவு இந்திய கடன் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1200 இற்கும் மேற்பட்ட சத்திரசிகிச்சை கருவிகளுக்கும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார். டிசம்பர் மாதத்துக்குள் குறித்த கையிருப்பு நாட்டிற்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் 120 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கே தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்திய கடன் திட்டத்தின் கீழ் அனைத்து கொள்முதல் முன்பதிவுகளும் அதற்கேற்ப செய்யப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் விநியோகத்தில் சிறிது தாமதம் உள்ளதாகவும் குறிப்பிட்டார், நாட்டில் 14 வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்கப் பெறுவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை!

Image
  இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை! இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த விசாரணைக்குப் பின்னர், அரசாங்கத்திடம் முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் இரட்டைக் குடியுரிமையுடன் சுமார் பத்து எம்.பி.க்கள் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தடம்புரள்வு காரணமாக தடைபட்ட மலையக தொடருந்து சேவைகள் நள்ளிரவு முதல் வழமைக்கு திரும்பியுள்ளது

Image
  தடம்புரள்வு காரணமாக தடைபட்ட மலையக தொடருந்து சேவைகள் நள்ளிரவு முதல் வழமைக்கு திரும்பியுள்ளது தடம்புரள்வு காரணமாக தடைபட்ட மலையக தொடருந்து சேவைகள் நள்ளிரவு முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து நேற்று முன்தினம் (28) கொழும்பு நோக்கி புறப்பட்டு சென்ற தொடருந்து ஹட்டன் கொழும்பு பிரதான தொடருந்து பாதையில் மாலை 4.15 மணியளவில் ஹட்டனுக்கும் ரொசல்ல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது. இதனால் மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் பாதிப்புக்குள்ளானதுடன் பயணிகளும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர். இந்நிலையில் தொடருந்து திணைக்களத்தின் ஊழியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் இணைந்து தொடருந்து பாதையினை சீர் செய்யும் பணியில் ஈடுப்பட்டதனை தொடர்ந்து நள்ளிரவு முதல் தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன. இதேநேரம் நேற்று நானுஓயாவில் இருந்து புறப்படவிருந்த இரண்டு தொடருந்து பயணங்கள் தடம்புரள்வு காரணமாக இரத்தச்செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஜே.வி.பி.யின் முதலாவது வெளிநாட்டு காரியாலயமாக மாலைதீவில் காரியாலயமொன்றை நிறுவ தீர்மானம்

Image
  ஜே.வி.பி.யின் முதலாவது வெளிநாட்டு காரியாலயமாக மாலைதீவில் காரியாலயமொன்றை நிறுவ தீர்மானம்  ஜே.வி.பி.யின் முதலாவது வெளிநாட்டு காரியாலயமாக மாலைதீவில் காரியாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சிக் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்விற்காக கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 3ம் திகதி மாலைதீவு விஜயம் செய்ய உள்ளார். மாலைதீவில் கட்சிக் காரியாலயம் நிறுவியதன் பின்னர் ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு போன்ற நாடுகளிலும் கட்சிக் காரியாலயங்களை நிறுவுவதற்கு ஜே.வி.பி தீர்மானித்துள்ளது. இந்த தகவல்களை கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கட்சிக் காரியாலங்களை நிறுவுவதற்காக கட்சியின் உறுப்பினர்கள் குறித்த நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க சபாநாயகரின் கணவர் மீது சுத்தியலால் தாக்குதல்!

Image
  அமெரிக்க சபாநாயகரின் கணவர் மீது சுத்தியலால் தாக்குதல்! அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர், சுத்தியலால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டுக்குள் புகுந்த ஒருவரால் தாக்கப்பட்ட 82 வயதான பெலோசி, தலை மற்றும் வலது கையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் சன் பிரான்சிஸ்கோ வீட்டிற்குள் நுழைந்த பின்னர், சபாநாயகர் நான்சி பெலோசியைப் பார்க்க வேண்டும் என்று கோரியதாகக் கூறப்படுகிறது.  இந்த நிலையில் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டில் 42 வயதுடைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்தச் சம்பவம், நேற்று இடம்பெற்றுள்ளது. தாக்குதல்தாரி, பெலோசியை ‘நான்சி வீட்டிற்கு வரும் வரை’ கட்டிவைக்க முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திலினி பிரியமாலி 128 கோடி ரூபாவுக்கும் அதிகமாக மோசடி!

Image
  திலினி பிரியமாலி 128 கோடி ரூபாவுக்கும் அதிகமாக மோசடி! இலங்கையில் பாரியளவிலான நிதி மோசடியில் ஈடுபட்ட திலினி பிரியமாலி, தமிழ் அரசியல்வாதிகள் எவருடனும் தொடர்பில் இருந்தார் எனத் தகவல் எதுவும் வெளியாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.  எனினும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலருடன் அவர் தொடர்பில் இருந்தார் என தகவல்கள் கிடைத்துள்ளன எனவும், இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.  திலினி பிரியமாலி தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். திலினி பிரியமாலி தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய, அவர் 128 கோடி ரூபாவுக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.  திலினி பிரியமாலிக்கு எதிராக இதுவரை மொத்தமாக 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.  இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் பிரகாரம் தி...

மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்த ஒன்றிணையுமாறு டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Image
  மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்த ஒன்றிணையுமாறு டக்ளஸ் தேவானந்தா அழைப்பு! அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழ் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். இதன்மூலம் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவுபடுத்த முடியும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் அனைத்து தரப்புக்களையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான ஆர்வத்தினை வெளியிட்டு வருகின்றனர். இந்த அரசியல் சூழலை தமிழ் தரப்புக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறுகிய நலன்களையும், தேர்தல் அரசியல் பற்றிய சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அனைத்து தமிழ் தரப்புக்களினதும் முயற்சிகள் மற்றும் தியாகங்களின் பலனாக கிடைத்த மாகாண சபைகளை செயற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றிணைந்து செயற்பட அனைவரும் முன்வரவேண்டும். அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபைகளை செயற்படுத்துவதன் மூலம் அதனைப் பாதுகாத்துக் கொண்டு,...

இலங்கையில் அத்தியாவசியமான160 மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

Image
  இலங்கையில் அத்தியாவசியமான160 மருந்துகளுக்கு தட்டுப்பாடு! இலங்கைக்கு அத்தியாவசியமான 383 வகையான மருந்துகளில் தற்போது சுமார் 160 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டி.ஆர்.கே. ஹேரத் தெரிவித்துள்ளார். இதய நோயாளிகளுக்கான மருந்துகள் அவற்றில் அடங்கும் என அவர் தெரிவித்தார்.

இலங்கையர்களை ஏமாற்றி கையடக்க தொலைபேசி மூலம் 14000 கோடி ரூபா பணம் கொள்ளை

Image
 இலங்கையர்களை ஏமாற்றி கையடக்க தொலைபேசி மூலம் 14000 கோடி ரூபா பணம் கொள்ளை நாட்டில் சீன தம்பதியினரால் 1400 கோடி ரூபாவிற்கும் அதிகத் தொகை கொள்ளையிடப்பட்டமை தொடர்பான தகவல்களை பொலிஸார் வௌிக்கொணர்ந்துள்ளனர்.  Crypto Currency முறையில் இந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் ஹோட்டல்களில் கருத்தரங்குகளை நடத்தி, பல்வேறு தரப்பினரை ஏமாற்றி கையடக்க தொலைபேசி மூலம் இந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.  இந்த வர்த்தகத்தின் பிரதான சந்தேகநபர் சீன யுவதி என அடையாளங்காணப்பட்டுள்ளது.  முதலீடு செய்யும் தொகையை விட அதற்கு மேலதிகமான தொகையை வருமானமாக ஈட்டிக்கொள்ள முடியும் என தெரிவித்து 8000-இற்கும் அதிகமானோரின் பணத்தை இவர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.  நிதி வைப்பிலிட்டதன் பின்னர் வைப்பீட்டாளர்களின் கணக்கில் ஐந்து மடங்கு இலாபம் அதிகரித்துள்ளதாக காண்பித்திருக்கின்றனர். எனினும், வைப்பீட்டாளர்களால் அந்த இலாபத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   இதனையடுத்து, தமது வருமானமும் வைப்பிலிடப்பட்ட பணமும் காணாமற்போயுள்ளதாக சிலர் ...

2022/23 பருவத்தில் நெற்செய்கைக்காக 13,000 மெற்றிக் தொன் யூரியா உரங்களை ஏற்றிச் செல்லும் முதலாவது கப்பல் அண்மையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த யூரியா உரம் சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதுடன், உரம் இறக்கும் பணி இன்று (28) ஆரம்பமானது.

Image
 2022/23 பருவத்தில் நெற்செய்கைக்காக 13,000 மெற்றிக் தொன் யூரியா உரங்களை ஏற்றிச் செல்லும் முதலாவது கப்பல் அண்மையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த யூரியா உரம் சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதுடன், உரம் இறக்கும் பணி இன்று (28) ஆரம்பமானது. விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா, அமைச்சின் செயலாளர் ரோஹன புஸ்பகுமார ஆகியோர் இதில் கலந்துகொண்டு நடவடிக்கைகளை அவதானித்தார். இந்த பருவத்திற்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு 105 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க உலக வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இக்கடன் தொகையின் கீழ் நெல் மற்றும் சோளம் சாகுபடிக்கு தேவையான யூரியா உரத்தை இந்த பருவத்தில் முழுமையாக பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொள்முதல் நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மையை பராமரிக்க உலக வங்கியின் பிரதிநிதிகள் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்தனர். எனவே, யூரியா உரம் கொள்முதலில் முறைகேடு ஏற்படாத வகையில் பயிர்களை பராமரிக்க முடிந்தது. இந்த முதலாவது யூரியா உரத்தை மட்டக்கள...

இவ்வருடம் செப்டம்பர் வரையில் இலங்கையில் 1406 வாகனங்கள் திருடிச் செல்லப்பட்டன.

Image
 இவ்வருடம் செப்டம்பர் வரையில் இலங்கையில் 1406 வாகனங்கள் திருடிச் செல்லப்பட்டன. இலங்கை முழுவதும் இவ்வருடத்தில் மாத்திரம் 1406 வாகன கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதிவரை மொத்தம் 1406 வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், கடந்த ஆண்டு (2021) முழுவதும் 1405 வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியிருந்ததுடன், இவ்வருடம் செப்டெம்பர் வரையில் மாத்திரம் இச்சம்பவம் அதிகரித்துள்ளது. திருடப்பட்ட வாகனங்களில் 12 பஸ்கள், 25 வேன்கள், 16 லொறிகள், 14 கார்கள், 311 முச்சக்கரவண்டிகள், 116 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 12 வகையான வாகனங்கள் அடங்குகின்றன. திருடப்பட்ட வாகனங்களில், பல வாகனங்கள் பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த காரணத்தினாலேயே திருடப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென நிஹால் தல்துவ தெரிவித்தார். வாகனத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்துமாறும் பொலிஸார், வாகன சாரதிகளிளுக்கு கோரிக்கை விட...

முக்கிய பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கையை வந்தடையவுள்ள இரு சீன விமானங்கள்!

Image
  முக்கிய பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கையை வந்தடையவுள்ள இரு சீன விமானங்கள்! சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை ஏற்றிய 2 விமானங்கள் இலங்கைக்கு இன்று (27) வரவுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட குறித்த மருந்துகள் சுமார் 35 மில்லியன் ரிங்கிட் (ரூ.1.8 பில்லியன்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களிலும் 23 மில்லியன் ரிங்கிட் (ரூ.1.2 பில்லியன்) பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை சீனா இலங்கைக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடு செல்ல தாய்மார்களுக்கு தடை!

Image
  வெளிநாடு செல்ல தாய்மார்களுக்கு தடை! ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டங்கள் விரைவில் கொண்டுவரப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்  கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் பிரச்சினைக்குரியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக பல சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாகவும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள்: தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

Image
  சிறுவர்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள்: தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சிறுவர்கள் தொடர்பாக, மாதம் ஒன்றிற்கு அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார தெரிவித்துள்ளார். கடந்த வருடம், சிறுவர்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள் அதாவது சுமார் 10,000 முறைப்பாடுகள் மேல் மாகாணத்தில் இருந்தே பதிவாகியுள்ளன. அந்த முறைப்பாடுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அந்தந்த பகுதியின் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உடல் குறைபாடுகள், மன நிலைகள் மற்றும் குழந்தைகளுக்கான நிதி நெருக்கடிகள் தொடர்பான முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெறுவதாக அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களுக்கு யாழில் விசேட நடமாடும் சேவை!

Image
  இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களுக்கு யாழில் விசேட நடமாடும் சேவை! இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை குறித்த செய்தியினை தங்கள் பத்திரிகையில் செய்தியாக வெளியிட்டு உதவுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை எதிர்வரும் 31.10.2022 திங்கட்கிழமை காலை 8.30 மாலை 4.30 மணி வரை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது. குறித்த நடமாடும் சேவையில் பின்வரும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் பங்குபற்ற உள்ளன. 1நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு 2.பாதுகாப்பு அமைச்சு 3.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு 4.பதிவாளர் நாயகம் திணைக்களம் 5.ஆட்பதிவு திணைக்களம் 6.குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் 7.இழப்பீட்டுக்கான அலுவலகம் 8.காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் 9.மாகாண காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் குறித்த நடமாடும் சேவையில் பின்வரும் சேவைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. 1.பிறப்பு மற்றும் திருமண சா...

கொழும்பை முற்றுகையிட்டு எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம்

Image
  கொழும்பை முற்றுகையிட்டு எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பை முற்றுகையிட்டு எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்தும், விரைவில் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஐக்கிய மகளிர் சக்தி, முன்னிலை சோசலிச கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உள்ளிட்ட பிரதான கட்சிகளும், சிவில் அமைப்புக்களும், காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்கார்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் (25.10.2022) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து ஐக்கிய மகளிர் சக்தியின் தலைவர் ஹிருணிகா பிரேமசந்திர கூறுகையில், எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி அனைவரும் ஒன்றிணைந்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம். ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ள தரப்பினருக்கும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிர...

யானை - மொட்டு இணைந்து புதிய கூட்டு

Image
  விரைவில் ஒரு அரசியல் மாற்றம் யானை - மொட்டு இணைந்து புதிய கூட்டு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர் என தெரிவிக்கப்டுகிறது. இதற்கான நடவடிக்கைகள் வெற்றியை நோக்கி நகர்கின்றன எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்கவின் மத்தியஸ்தனுடனான பேச்சுக்கள் தொடர்கின்றன எனவும் செய்தி வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த கூட்டணி போட்டியிடும் எனவும் இந்த கூட்டணியின் புதிய சின்னமாக அன்னம் அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கண்டி, கம்பஹா, காலி, பொலனறுவை, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்த கூட்டணியில் இணைய உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தூண்களில் ஒருவரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் விரைவில் ஒரு அரசியல் முடிவொன்றை எடுக்க உள்ளார் எனவும் அறிய முடிகிறது.

பிரியமாலிக்கு ஆதரவான 6 நடிகைகளிடம் விசாரணை

Image
  பிரியமாலிக்கு ஆதரவான 6 நடிகைகளிடம் விசாரணை 500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன். இணைந்து பணக்காரர்களை மிரட்டி பல கோடி ரூபாய் பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 6 நடிகைகளிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த ஆறு நடிகைகளையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.  திலினி பிரியமாலி என்ற பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இந்த ஆறு நடிகைகளும் அவரிடமிருந்து பல லட்சம் பணம் மற்றும் பல்வேறு பெறுமதியான பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  பல்வேறு பணக்கார தொழிலதிபர்கள், தொழில் அதிபர்கள், உயரதிகாரிகளை மிரட்டி பணம் பெறுவதற்காக இந்த நடிகைகளை திலினி பிரியாமாலி பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.  அவர்கள் பணக்காரர்களுடன் உடலுறவு வைத்து ரகசியமாக வீடியோ எடுத்து அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி அந்த பணக்காரர்களிடம் பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. ...

வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு !

Image
  வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு ! இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2022 செப்டெம்பர் மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 5.75% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில்வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 1,093.98 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இதில் ஆடை ஏற்றுமதி பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

‘நாம் சீனாவைப் பெற வேண்டும்’: இருதரப்பு காலநிலை பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று ஜான் கெர்ரி அழைப்பு

Image
  ‘நாம் சீனாவைப் பெற வேண்டும்’: இருதரப்பு காலநிலை பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று ஜான் கெர்ரி அழைப்பு கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் குறைப்பதில் உலகளாவிய முன்னேற்றத்தைத் துண்டிக்க, காலநிலை நெருக்கடி குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புமாறு ஜான் கெர்ரி சீனாவை வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிபருக்கான காலநிலை குறித்த சிறப்புத் தூதர் ஜோ பிடன் கூறியதாவது: அனைத்து உமிழ்வுகளில் சீனா 30% ஆகும். நாம் சீனாவைப் பெற வேண்டும். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் கோடையில் நெருக்கடியில் மூழ்கின, நான்சி பெலோசி, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரும் அரசாங்கத்தில் மூன்றாவது மிக மூத்த ஜனநாயகக் கட்சியும் தைவானுக்கு விஜயம் செய்தார். இது பெய்ஜிங்கால் ஒரு பெரிய ஆத்திரமூட்டலாகக் கருதப்பட்டது, இது சர்ச்சைக்குரிய தீவுகளின் மீது இறையாண்மையைக் கோருகிறது, மேலும் இராஜதந்திர உறவுகள் முறிந்தன. உலகின் இரண்டு பெரிய உமிழ்ப்பான்கள் ஒத்துழைக்கத் தவறியது உலகளாவிய காலநிலை நடவடிக்கைக்கு சிக்கல்களை உருவாக்கியுள்ளது. “சீனா இல்லை, நாம் எங்கு செல்ல விரும்புகிறோம் என்பதற்கான சிறந்த நம்பிக்க...

பதிவு செய்யாமல் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது !

Image
  பதிவு செய்யாமல் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது ! பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு முன்னர் உரிய முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். முச்சக்கர வண்டிகளுக்கு முறையான கட்டுப்பாடு இல்லாமல் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இப்போது உள்ளது போல், பதிவு இல்லாமல் ஒரே நேரத்தில் எரிபொருள் வழங்கினால், எல்லோருக்கும் வழங்க முடியாத நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடு கடுமையான முட்டை தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும் !

Image
  நாடு கடுமையான முட்டை தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும் ! எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் எமது நாடு கடுமையான முட்டை தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் இதன் காரணமாக ஜனவரி மாதத்திற்கு பிறகு முட்டை விலை மேலும் உயரலாம் என்றும் இலங்கை கால்நடை மருத்துவ சங்கத்தின் தலைவர் டொக்டர் சுசந்த மல்லவாராச்சி தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற இலங்கை கால்நடை மருத்துவ சங்கத்தின் வருடாந்த விஞ்ஞான அமர்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, முட்டை பெறும் கோழிகளுக்கு தாய் விலங்குகள் இல்லாததே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம். வருடாந்தம் குறைந்தபட்சம் 80,000 தாய் விலங்குகள் தேவைப்பட்டாலும் இம்முறை கிட்டத்தட்ட பத்தாயிரம் தாய் விலங்குகளை மட்டுமே இறக்குமதி செய்ய முடிந்தது.அதற்கு முக்கிய காரணம் நமது நாடு தற்போது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியாகும். நிதிப் பிரச்சினை காரணமாக கால்நடை துறைக்கு அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை கிடைக்கவில்லை. அதனால் தாய் விலங்குகளின் இறக்குமதி மிகவும் குறைந்துள்ளது. இது நிச்சயமாக எதிர்காலத்தில...