யானை - மொட்டு இணைந்து புதிய கூட்டு

 

விரைவில் ஒரு அரசியல் மாற்றம் யானை - மொட்டு இணைந்து புதிய கூட்டு

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர் என தெரிவிக்கப்டுகிறது.

இதற்கான நடவடிக்கைகள் வெற்றியை நோக்கி நகர்கின்றன எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்கவின் மத்தியஸ்தனுடனான பேச்சுக்கள் தொடர்கின்றன எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த கூட்டணி போட்டியிடும் எனவும் இந்த கூட்டணியின் புதிய சின்னமாக அன்னம் அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டி, கம்பஹா, காலி, பொலனறுவை, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்த கூட்டணியில் இணைய உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தூண்களில் ஒருவரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் விரைவில் ஒரு அரசியல் முடிவொன்றை எடுக்க உள்ளார் எனவும் அறிய முடிகிறது.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021