இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் ஏற்படவுள்ள மாற்றம்!

 

இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் ஏற்படவுள்ள மாற்றம்!

75வது சுதந்திர தின நிகழ்வை குறைந்த செலவில் பிரமாண்டமாகவும் பெருமையாகவும்  கொண்டாடுவது தொடர்பான  கலந்துரையாடல் நேற்று (ஜன. 26) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்துவது அதிகாரிகள் மற்றும் அரசியல் அதிகார சபைகளின் பொறுப்பாகும் எனவும், அதற்காக தேவையான செலவினங்களை மதிப்பீடு செய்து செலவு செய்வதாகவும் குறிப்பிட்டார்.

75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு காணப்படுவதாகவும் அது தொடர்பில் அவதானம் செலுத்தி அதற்கான செலவீனங்களை குறைக்க முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுதந்திர தின விழாவை ஒட்டி ஜனவரி 2ம் தேதி முதல் 19ம் தேதி வரை பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், சுதந்திர தின விழாவை ஒட்டி நகர்ப்புற காடுகளை உருவாக்கும் திட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, பாதுகாப்பு வெளிவிவகார, கல்வி, பௌத்த மற்றும் கலாசார அலுவல்கள் , ஊடகங்கள் , நிதி அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திறைசேரி உள்ளிட்ட வரி நிறுவனங்களின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !