தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து மேலும் இருவர் இராஜினாமா
தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து மேலும் இருவர் இராஜினாமா?

தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலும் இரு உறுப்பினர்கள் பதவி விலகத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி வாராந்த சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களை நீக்குவதற்கு பல சக்திவாய்ந்த நபர்கள் கடுமையாக முயற்சித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமையினால் இரண்டு உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க ஆணைக்குழுவின் இரு உறுப்பினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
அதன்படி, அவர்களின் பாதுகாப்பிற்காக தலா 4 பொலிசார் வீதம் எட்டு பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாக கூறப்படும் எம்.ஜி.சார்ள்ஸின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment