மரண தண்டனை கைதி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது கைது!

 

மரண தண்டனை கைதி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது கைது!

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரியின் சீருடைக்கு நிகரான சீருடையை அணிந்து கைதியொருவர் தப்பிச் சென்றபோது  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் இன்று (25) மத நிகழ்வுக்காக சிறைச்சாலையில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது சந்தேகமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் கைதியை துரத்திச் சென்று, மருதானை புகையிரத நிலையத்தில் கைதி ரயிலில் ஏறும்போது கைதுசெய்து, வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வந்துள்ளனர். 

42 வயதுடைய பன்னல பிரதேசத்தை சேர்ந்த நபரே தப்பிச் செல்ல முயன்றபோது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2015ஆம் ஆண்டு கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி என தெரிவிக்கப்படுகிறது. 

இச்சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !