மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடரும் மரணங்கள் பிரசவத்தின் போது சிசு தாய் மரணம்!

(மண்டூர் ஷமி)
காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கிரான்குள பிரதேசத்தைச் சேர்நத் தாய் அவரின் பிறந்த சிசு மரணமடைந்த சம்பவம் மட்டு போதனா வைத்தியசாலையில் 14ம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரான்குள பிரதேசத்தைச் சேர்ந்த (35) வயதுடைய இருபிள்ளைகளின் தாயாரும் ஆசிரியையுமான சின்னத்தம்பி சுபாஸ்ஜினி மற்றும் அவரின் இரு நாள் பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்தவர்களாவார்கள்.
குறித்த குடும்பப் பெண் கர்ப்பம் தரித்து சத்திர சிகிச்சை மூலம் பெறப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி கடந்த எட்டாம் திகதி மரணமான நிலையில் தாய் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சைப்பரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த (14) திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார்.

விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் அவர்களின் தலைமையிலான சட்ட வைத்தியர்களினால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் உடற் கூறுகள் பகுப்பாய்விற்கு அனுப்பட்டுள்ளதாகவும்.மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment