Posts

Showing posts from March, 2024

உங்களுக்கு இன்னும் பாடப்புத்தகங்களும் சீருடைகளும் கிடைக்கவில்லையா?

Image
உங்களுக்கு இன்னும் பாடப்புத்தகங்களும் சீருடைகளும் கிடைக்கவில்லையா? 2024 ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, சகல பாடசாலைகளுக்கும் விநியோகிப்பதற்காக பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச கல்வி அலுவலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படாத பாடசாலைகள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக பின்வரும் தொலைபேசி/தொலைநகல்/மின்னஞ்சலுக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு அந்தந்த அதிபர்களுக்கு தெரிவிக்கின்றது. பாட புத்தகங்களுக்கு – *தொலைபேசி எண்கள் – 0112784815/0112785306 *தொலைநகல் – 0112784815 * மின்னஞ்சல் முகவரி – epddistribution2024@gmail.com பாடசாலை சீருடைகளுக்கு – *தொலைபேசி இலக்கம் – 0112785573 *தொலைநகல் – 0112785573 * மின்னஞ்சல் முகவரி – schoolupplymoe@gmail.com

மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில், நான்கு வயது சிறுமி உயிரிழப்பு..!

Image
மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில், நான்கு வயது சிறுமி உயிரிழப்பு..! மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று (11) உயிரிழந்துள்ளார். தாய் வௌிநாடு சென்றுள்ளதால் தாத்தா, பாட்டி மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். தந்தை அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள வேறொரு வீட்டில் வசித்து வருவதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.