உங்களுக்கு இன்னும் பாடப்புத்தகங்களும் சீருடைகளும் கிடைக்கவில்லையா?

உங்களுக்கு இன்னும் பாடப்புத்தகங்களும் சீருடைகளும் கிடைக்கவில்லையா?
2024 ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, சகல பாடசாலைகளுக்கும் விநியோகிப்பதற்காக பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச கல்வி அலுவலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படாத பாடசாலைகள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக பின்வரும் தொலைபேசி/தொலைநகல்/மின்னஞ்சலுக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு அந்தந்த அதிபர்களுக்கு தெரிவிக்கின்றது. பாட புத்தகங்களுக்கு – *தொலைபேசி எண்கள் – 0112784815/0112785306 *தொலைநகல் – 0112784815 * மின்னஞ்சல் முகவரி – epddistribution2024@gmail.com பாடசாலை சீருடைகளுக்கு – *தொலைபேசி இலக்கம் – 0112785573 *தொலைநகல் – 0112785573 * மின்னஞ்சல் முகவரி – schoolupplymoe@gmail.com

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !