பொல்லால் தாக்கப்பட்டு மூதாட்டி கொ லை ; சகோதரனின் மகன் தப்பியோட்டம் !

காலி பிரதேசத்தில் கொனபீனுவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமகம, அளுத்வல பகுதியில் உள்ள வீடொன்றில் பொல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கொனபீனுவல பொலிஸார் தெரிவித்தனர்.
சாமகம, அளுத்வல பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தனது சகோதரனின் மகனுடன் நீண்ட காலமாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் பொசன் பௌர்ணமி தினத்தன்று வழிபாடுகளை முடித்து விட்டு மீண்டும் வீட்டிற்குச் சென்ற பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
இந்த கொலை சம்பவமானது கடந்த 21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து, சந்தேக நபரான கொலை செய்யப்பட்டவரின் சகோதரனின் மகன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொனபீனுவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment