தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து எதிர்வரும் 15 ஆம் திகதி அறிக்கை வெளியிடவுள்ளோம் - தமிழரசுக் கட்சியின் தலைவர் !

 

தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து எதிர்வரும் 15 ஆம் திகதி அறிக்கை வெளியிடவுள்ளோம் - தமிழரசுக் கட்சியின் தலைவர் !


ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து எதிர்வரும் 15 ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளோம் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கத்தின் வவுனியா இல்லத்தில் தமிழரசுக் கட்சியின் விசேட குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஏற்கனவே சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக ஏற்கனவே 6 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்தலில் எமது மக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும்?,என்ன அடிப்படையில வாக்களிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில்,
அதற்காக கட்சி ரீதியான கொள்கை, எமது இனப்பிரச்சனை தீர்வு, சமஸ்டி அடிப்படையிலான தீர்வு என்பவற்றுக்கு ஆதரவான அறிக்கையை நாம் எதிர்பார்க்கின்றோம்.

அதனடிப்படையில் தயாரிக்கப்பட்டிருந்த தேர்தல் அறிக்கை காரணமாக வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாக கொள்கை அடிப்படையில் இணக்கம் ஏற்பட்டு அதில் எங்களுக்கும், அவருக்கும் இணக்கம் ஏற்படக் கூடிய விடயங்களை அடையாளப்படுத்தி எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன் அல்லது 15 ஆம் திகதி கூடி ஆராய்ந்து பொது மக்களுக்காக அறிக்கையை வெளியிடவுள்ளோம் எனத் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !