தேர்தல் தினத்தன்று சுகாதார சேவைகள் சீர்குலையலாம் - சுகாதார நிபுணர்கள் சங்கம் அச்சம் !

 

தேர்தல் தினத்தன்று சுகாதார சேவைகள் சீர்குலையலாம் - சுகாதார நிபுணர்கள் சங்கம் அச்சம் !


ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று சுகாதார சேவைகள் சீர்குலைவதைத் தடுப்பதற்கு சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையினால், வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு இடையூறு ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, சுகாதார ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் வாக்குச் சாவடியாவது அல்லது அவர்கள் கடமையாற்றும் இடத்துக்கு மாற்றிடம் வழங்க வேண்டுமென இச்சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கு மாத்திரமே தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏனைய சுகாதாரப் பணியாளர் அனைவரும் அவரவர் தொகுதிகளுக்குச் சென்று வாக்களிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து சுகாதார ஊழியர்களும் வாக்களிக்க தத்தமது தொகுதிகளுக்குச் சென்றால், வைத்தியசாலை செயற்பாடுகள் பாதிக்கப்படலாமென சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பொதுமக்களின் சுகாதார உரிமைக்கும் சுகாதார ஊழியர்களின் வாக்களிக்கும் உரிமைக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்படக்கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக, சுகாதார அமைச்சுக்கும், பொது நிர்வாக அமைச்சுக்கும் கடிதம் அனுப்பப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்திள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !