கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் காயம் ; சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது

 

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் காயம் ; சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது


கொழும்பு, கொம்பனித்தெரு பிரதேசத்தில் கடந்த 13 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் போதைப்பொருளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளதாக நாராஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 

நாராஹேன்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகஹவத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராஜகிரிய பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 760 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாராஹேன்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !