சிறுவர்களின் பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் !

சிறுவர்களின் பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ! நாட்டில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டுமென மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். அமைச்சில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், சிறுவர்களுக்கு துஷ்பிரயோகம் ஏற்படும் அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் பாதுகாக்க பல்துறை பொறிமுறை ஒன்றை நிறுவும் நோக்கத்துடன் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு செயற்பட்டு வருகிறது. சிறுவர்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான இந்த பன்முகத்தன்மை கொண்ட பொறிமுறையின் முக்கியதவத்தை வெளிப்படுத்த வேண்டும். மேலும், இந்த பன்முகத்தன்மை கொண்ட பொறிமுறையை நிறுவதற்கு ஜனாதிபதி, சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஆகியோர் இந்த பன்முகத்தன்மை கொண்ட பொறிமுறையை நிறுவ உத்தரவிட்டனர். அமைச்சுக்களின் அமைச்சர்களினா...