பாலமுனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பிரபல போதைப்பொருள் வர்த்தகர்கள் இருவர் கைது !
பாலமுனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பிரபல போதைப்பொருள் வர்த்தகர்கள் இருவர் கைது !
மட்டக்களப்பில் 2788 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த பிரபல போதைப்பொருள் வர்த்தகர்கள் இருவர் செவ்வாய்க்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் ஆர் டி எஸ் வீதியில் வைத்து 30 மற்றும் 35 வயதுகளையுடைய இரு போதைப்பொருள் வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி குற்றத்தடுப்பு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
30 வயதுடைய வர்த்தகரிடமிருந்து 1228 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், 35 வயதுடைய நபரிடமிருந்து 1560 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட நபர்கள் புதன்கிழமை (28) மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment