தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவம் ; 22 மாணவர்கள் இடைநீக்கம் !
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவம் ; 22 மாணவர்கள் இடைநீக்கம் !
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதை செய்ததாக கூறப்படும் 22 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்களை கொண்ட விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்களே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகள் முடிவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் மேலும் தெரிவித்துள்ளார்
Comments
Post a Comment