மன்னாரில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு - ஒருவர் கைது

 

மன்னாரில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு - ஒருவர் கைது


மன்னார் நகரில் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் சிலை இன்று புதன்கிழமை (25) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதோடு, இதில் தொடர்பட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளை முக்கியஸ்தர்கள் இன்று காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தந்தை செல்வாவின் உருவச் சிலையில் காணப்பட்ட அவரது தலைப்பகுதி முழுமையாக அகற்றப்பட்ட நிலையில், அவரது சிலைக்கு அருகிலிருந்து சிலையின் தலைப்பகுதி மீட்கப்பட்டுள்ளது.

இதனையறிந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று கள நிலையை பார்வையிட்டனர்.

இதனையடுத்து, விசாரணைகளை நடத்திய மன்னார் பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து, மேலதிக விசாரணைகளில் மன்னார் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !