பஸ் கட்டணக் குறைப்பு இடைநிறுத்தம் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு

 

பஸ் கட்டணக் குறைப்பு இடைநிறுத்தம் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு



செவ்வாய்க்கிழமை (01) நடைமுறைக்கு வரவிருந்த 2.5% பஸ் கட்டணக் குறைப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிப்பே இதற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பஸ் கட்டண அமைப்பை மீண்டும் பரிசீலிக்க தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பேச்சாளர் தெரிவிக்கையில், முன்னதாக அறிவிக்கப்பட்ட 2.5% கட்டணக் குறைப்பு இன்று நடைமுறைக்கு வராது.

எரிபொருள் விலை மாற்றத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்த பிறகு, இன்று ஒரு புதிய கட்டண அமைப்பு வெளியிடப்படும் என்றார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !