ராஜபக்ச தலைமையில் யொவுன் சீல சமாதி வேலைத்திட்டத்தம்... தமிழ் முஸ்லிம் சமூக இளைஞர் யுவதிகள், சமயத் தலைவர்களும் கலந்து சிறப்பிப்பு. ஹஸ்பர் ஏ ஹலீம்_ இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களுடைய எண்ணக்கருவிற்கமைய புத்த சமய விவகார அமைச்சின் ஒருங்கிணைப்பில் ஒழுக்க விழுமியங்களைப் பேணுகின்ற இளைஞர் சமூகம் ஒன்றை கட்டியெழுப்பும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட யொவுன் சீல சமாதி வேலைத்திட்டத்தின் மூன்றாவது வேலைத்திட்டம் (28)திருகோணமலை சேருவில ரஜமகா விகாரையில் நடைபெற்றது. தமிழ் முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள், சமயத் தலைவர்கள் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும். இந்நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல, பிரதேச அரசியல் தலைமைகள், மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, சேருவில பிரதேச செயலாளர் பி.ஆர்.ஜயரத்ன, இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து சிறப்பித்த...