Posts

வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட வாகன பயண அனுமதிகளை தவறாக பயன்படுத்திய மூவர் கைது.

Image
 வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட வாகன பயண அனுமதிகளை தவறாக பயன்படுத்திய மூவர் கைது.   வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதிகளை தவறாக  பயன்படுத்திய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஒரு மருத்துவருக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதியுடன் காரில் பயணித்த வெள்ளவத்தையில் வசிக்கும் 30 வயது நபர் நரஹென்பிட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 07 இல் உள்ள விஜெராம மாவதவில் மருத்துவரின் வாகன அனுமதி பெற்ற காரை ஒட்டி சென்ற 46 வயதான ஒருவரை காவல்துறை கைது செய்தது. ஒரு டாக்டருக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதியுடன் ஒரு வாகனத்தை செலுத்திய 28 வயது இளைஞரை கோட்டை போலீசார் கைது செய்தனர். வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனுமதிகளை தவறாக பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அவர்கள் பொதுமக்களை எச்சரித்தனர். தொழில் வல்லுநர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் ஊழியர்களாக ஆள்மாறாட்டம் செய்யும் நபர்களைக் கைது செய்ய காவல்துறை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.

விமானம் வழிமறிப்பு விவகாரம்: பெலாரஸ் மீது புதிய தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் விமானங்களுக்கு விதிப்பு.

Image
 விமானம் வழிமறிப்பு விவகாரம்: பெலாரஸ் மீது புதிய தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் விமானங்களுக்கு விதிப்பு.   ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதி பதவியில் கடந்த 27 வருடமாக  அலெக்சாண்டர் லுகாசெங்கோ இருந்து வருகிறார்.  கடந்த வருடம் August மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் முறைகேடு செய்தே வெற்றி பெற்றதாக சர்ச்சை எழுந்தது. அதைத்தொடர்ந்து, தன்னை விமர்சிப்பவர்களை அவர் ஒடுக்கி வருகிறார். இதனால், பெரும்பாலான அரசியல் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், சிலர் வெளிநாட்டுக்கும் தப்பி விட்டனர். அதுபோல், பெலாரஸ் நாட்டை சேர்ந்த ரோமன் புரோட்டசெவிச் என்ற பத்திரிகையாளர் ஜனாதிபதியை விமர்சனம் செய்து வருகிறார். ஜனாதிபதியின் அத்துமீறல் அதிகரித்ததால், புரோட்டசெவிச், லிதுவேனியா நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். அங்கிருந்தபடி, ஜனாதிபதி தேர்தலில் உண்மையிலேயே வெற்றி பெற்றதாக கருதப்படும் எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாக தனது கருத்தை எழுதியும் வருகிறார். இதற்கிடையே, கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் நகரில் எதிர்க்கட்சி தலைவருடன் இணைந்து நிகழ்ச்சியொன்றிலும் ரோமன் புரோட்டசெவிச் பங்கேற்றார். பின்னர், ...

நாளை பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் வேளையில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் சம்மாந்துறையில் நடைமுறைகள்..

Image
 நாளை பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் வேளையில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் சம்மாந்துறையில் நடைமுறைகள்..   - ஐ.எல்.எம் நாஸிம்   - நாட்டிலும்,கல்முனை பிராந்திய சுகாதார பிரிவிகளிலும் வேகமாக  பரவிவரும் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம்  சம்மாந்துறை பிரதேசத்திலும் இனங்காணப்பட்டுள்ளதோடு இந்  நிலைமை தொடருமாயின் முற்றாக முடக்கப்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  ஜீ.சுகுணன் அவர்களினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அதற்கமைய கொரோனா பாதுகாப்பு செயலணிக் குழு விசேட கூட்டம்  இன்று (24) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் இடம் பெற்றது.  இக் கூட்டத்தில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம் கபீர் ,சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்நெளஷாட், ,சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் ஐ.எம்.பாரிஸ்,சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத், சம்மாந்துறை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி ஜெயவர்தனா, சமயத் தலைவர்கள்,வர்த்தக சங்கத்தின் செ...

ஹெரோயினுடன் ஓட்டமாவடியில் இருவர் கைது

Image
 ஹெரோயினுடன் ஓட்டமாவடியில் இருவர் கைது ஹெரோயின் போதைப்பொருடன் செம்மண்ணோடை, ஓட்டமாவடி பிரதேசங்களைச் சேர்ந்த 33 மற்றும் 29 வயதுடைய இருவர் இன்று 25.5.2021ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் ஓட்டமாவடி, சாவன்னா ஹாஜியார் சந்தியில் வைத்து  காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,  கொரோனாவின் மூன்றாவது அலையின் காரணமாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை இன்று தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பொது மக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கொள்வனவிற்காக வியாபார நிலையங்களில் நெருசலாக கூடுவதைக் கட்டுப்படுத்தும் கண்காணிப்பு பணியில் பாதுகாப்புத் தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.  இப்பணியில் ஓட்டமாவடி, சாவன்னா ஹாஜியார் சந்தியில் காகித ஆலை இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் ஈடுபட்டிருந்த வேளை, போக்குவரத்து விதிகளை மீறி தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை வழிமறித்த போது, தம்மிடமிருந்த ஹெரோயின்...

வாழைச்சேனை, ஓட்டமாவடியிலும் பயணக்கட்டுப்பாடு தளர்வு : பொலிஸார் களத்தில்

Image
 வாழைச்சேனை, ஓட்டமாவடியிலும் பயணக்கட்டுப்பாடு தளர்வு : பொலிஸார் களத்தில்   எஸ்.எம்.எம்.முர்ஷித்  நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு இன்று செவ்வாய்க்கிழமை தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஒன்றுகூடுவதையும், தேவையின்றி வெளிச் செல்வதையும் தடுக்கும் வகையில் பாதுகாப்புப் பிரிவினர் அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் இராணுவத்தினர் வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்தில் நின்று வீதிகளில் தேவையின்றி வரும் மக்களை சோதனைச்செய்து வீட்டுக்குத் திருப்பியனுப்பி வைக்கும் நடவடிக்கை இடம்பெற்றது. அத்தோடு, வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கொள்வனவு செய்வதாக இருந்தால் தூர இடங்களுக்குச் செல்லாமல் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள கடைகளுக்குச்சென்று பொருட்கொள்வனவு செய்யுமாறு பொலிஸாரினால் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர். வர்த்தக நிலையங்கள் மற்றும் வங்கிகள் தங்களது சேவைகளைப் பெறும் நபர்கள் சமூக இடைவெள...

கொரோணாத் தொற்றினைத் தடுப்பதற்காக உபயோகிக்கும் மாஸ்கினை இரு தடவைக்கு மேல் பாவிப்பதால் ஏற்படும் புதிய கறுப்பு பூஞ்சன நோய் மக்களே அவதானம்

 கொரோணாத் தொற்றினைத் தடுப்பதற்காக உபயோகிக்கும் மாஸ்கினை இரு தடவைக்கு மேல் பாவிப்பதால் ஏற்படும் புதிய கறுப்பு பூஞ்சன நோய் மக்களே அவதானம்

றிசாட் பதியுதீனுக்கு ஆதரவாக அம்பாறையில் சுவரொட்டிகள்.

Image
 றிசாட் பதியுதீனுக்கு ஆதரவாக அம்பாறையில் சுவரொட்டிகள்.     பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) முன்னாள் அமைச்சர்  ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 1 மாதம் நிறைவு பெற்றதை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. PHOTOS : https://www.facebook.com/MadawalaNewsWeb/posts/4089645994455035 இச்சுவரொட்டியில் அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் விரைவான விடுதலை கிடைக்க ஆவண செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இச்சுவரொட்டியானது பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில்  மருதமுனை, நற்பிட்டிமுனை, கல்முனைகுடி ,இஸ்லாமபாத்,   சாய்ந்தமருது, மாளிகைக்காடு , நிந்தவூர் ,அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ,சம்மாந்துறை, மாவடிப்பள்ளி,  சவளக்கடை, மத்தியமுகாம், பொத்துவில், பகுதிகளில் இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன. மேலும் கடந்த புனித ரமழான் மாதத்தில்  பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுத்தீன் சபாநாயகரின் அனுமதியோ, நீதிமன்ற உத்தரவோ பெறப்படாமல...