6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன் துபாய் செல்ல முயற்சித்த இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது.
6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன் துபாய் செல்ல முயற்சித்த இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது. கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன் டுபாய் நோக்கிப் பயணிக்க முயற்சித்த 7 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் நேற்று(24) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களிடம் இருந்து அமெரிக்க டொலர், யூரோ மற்றும் ஸ்ரேலிங் பவுன் என்பன கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவின் பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.