வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்களுடன் வந்த நந்தன் வேலுப்பிள்ளை என்பவரால் ஊடகவியலாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்களுடன் வந்த நந்தன் வேலுப்பிள்ளை என்பவரால் ஊடகவியலாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி மட்டக்களப்பு வந்தாறுமூலையில் ஊடகவியலாளர் செய்தி சேகரிக்கச் சென்றவேளை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இலட்சுமனன் தேவப்பிரதீபன் (நாராயணன்) என்ற ஊடகவியலாளரே இன்று காலை (26) தாக்குதலுக்குள்ளாகி செங்கலடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வந்தாறுமூலை சந்தைப் பகுதியில் விபத்தொன்றில் உயிரிழந்த சமூகசேவையாளர் அமரர் க.பாஸ்கரன் என்பவரது பெயரில் உறவினர்களால் ஞாபகார்த்தமாக 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 'பேருந்து தரிப்பிடம்' கட்டப்பட்டு உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்குட்பட்டிருந்தனர்;. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். கே.துரைராஜசிங்கம் செங்கலடி பிரதேச சபை,இலங்கை போக்குவரத்து சபை ,வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகிய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்க மட்டக்களப்பு பணிப்பாளர...