Posts

காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு - 3 மாணவர்கள் கைது

Image
  காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு - 3 மாணவர்கள் கைது பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள கிரிதிஎல அணைக்கட்டில் இருந்து சிறுவன் ஒருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெல்மடுல்ல, பரண்டுவ பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான். குறித்த மாணவன் அப்பகுதியில் 10ம் வகுப்பில் படித்து வருவது தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவன் கடந்த 26 ஆம் திகதி லெல்லுப்பிட்டிய பகுதிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளதுடன், அவர் வீடு திரும்பாதமை தொடர்பில் அவரது பெற்றோர் கடந்த 27 ஆம் திகதி இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று (28) குறித்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் குறித்த மாணவன் மேலும் சில மாணவர்களுடன் நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும், அவருடன் குளித்துக் கொண்டிருந்த ஏனைய மாணவர்கள் யாரிடமும் கூறாமல் அங்கிருந்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மாணவன் காணாமல் போனது குறித்து யாரிடமும் கூறாமல் அங்கிருந்து சென்ற மூன்று மாணவர்களும் பொலி...

தொலைக்காட்சி பேட்டியில் இனவாதம் பேச முயன்ற அறிவிப்பாளரை கடுமையாக சாடிய ரணில்

Image
  தொலைக்காட்சி பேட்டியில் இனவாதம் பேச முயன்ற அறிவிப்பாளரை கடுமையாக சாடிய ரணில் புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது  அரசாங்கத்திற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை கண்டித்து இனவாத கருத்துக்களை முன்வைத்த தொலைக்காட்சி ஊடகவியலாளரை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார். கேள்வி- இந்த நெருக்கடிகளை பயன்படுத்தி தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசியல் தீர்வு குறித்து பேசுகின்றது ? தடை செய்யப்பட்ட அமைப்புகள் மீதான தடையை நீக்கவேண்டும் என கோருகின்றது-இவை உண்மையா? ரணில்- தடைசெய்யப்பட்ட அமைப்புகள் என்றால் என்ன? ஊடகவியலாளர் -விடுதலைப்புலிகளிற்கு நிதி வழங்கிய அமைப்புகளே தடை செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரணில் – அவ்வாறான அமைப்புகள் பல தடைசெய்யப்படவில்லை,இந்த தடை அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நடைமுறைக்கு வந்தது, தடையை நீக்கவேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் பிரச்சினை உருவாகின்றபோது நாங்கள் இனவாதத்திற்கு திரும்புகின்றோம்,இது பழைய கதை. ஊடகவியலாளர் – இல்லை தற்போது இது பற்றி பேசப்படுகின்றது ரணில் இது...

இலங்கையில் தங்கத்தின் விலை 200,000 ரூபாவை கடந்துள்ளது

Image
  இலங்கையில் தங்கத்தின் விலை 200,000 ரூபாவை கடந்துள்ளது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ. 200,000 கடந்துள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தங்கத்தின் விலை இவ்வாறு சடுதியாக அதிகரித்துள்ளது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் மற்றும் கட்டணங்கள் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்து வருகின்றன உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்தாலும், டொலரின் தாக்கம் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்படுவதாக  தங்காபரண வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

#நிந்தவூர் பிரதான வீதியில் எரிபொருள் பவுசர் ஒன்றுடன் ஆட்டோ விபத்துக்குள்ளானதில் சிறுமி உட்பட நால்வர் பலத்த காயமடைந்துள்ளனர் !!

Image
 #நிந்தவூர் பிரதான வீதியில்  எரிபொருள் பவுசர் ஒன்றுடன் ஆட்டோ விபத்துக்குள்ளானதில்  சிறுமி உட்பட நால்வர் பலத்த காயமடைந்துள்ளனர் !! நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில்  எரிபொருள் பவுசர் ஒன்றுடன் ஆட்டோ மோதியுள்ளது. இந்த சம்பவம் இரவு சுமார் 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்றில் இருந்து சம்மாந்துறை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்று கொண்டிருந்த எரிபொருள் பவுசரும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது  முச்சக்கர வண்டி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த சிறுமி உட்பட நால்வர் பலத்த காயங்களுக்குள்ளாகி நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது...

மீண்டும் 5000 ரூபா : அமைச்சரவை அங்கீகாரம்

Image
  மீண்டும் 5000 ரூபா : அமைச்சரவை அங்கீகாரம் குறைந்த வருமானம் பெறும் 3.1 மில்லியன் குடும்பங்களுக்கு 5000 ரூபா விசேட கொடுப்பனவொன்றை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாத்திரம் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்

மனைவி தூக்கிட்டதனை கண்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை - மயிலம்பாவெளியில் சம்பவம்

Image
  மனைவி தூக்கிட்டதனை கண்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை - மயிலம்பாவெளியில் சம்பவம் (மண்டூர் ஷமி) ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மயிலம்பாவெளி பிரதேசத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்ததனை கண்டு சந்திரகுமார் கோபனா (28) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மையில் இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்ப தகராற்றினால் வீட்டின் அறையினுள் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதனை கண்ட கணவன் மனைவியை தூக்கில் இருந்து மீட்டெடுத்து அதே தூக்குக்கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் இச்சபவத்தில் மனைவியான கணேசன் பிரதீபா (20) என்பவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவத...

கடதாசித் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தீர்மானம்!

Image
  கடதாசித் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தீர்மானம்! நாட்டில் நிலவும் கடதாசித் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் முறைமைக்கு மாற்றுவது தொடர்பில் முறைமையொன்று திட்டமிடப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரயில் பயண சீட்டுக்களை அச்சிடுவதற்குத் தேவையான கடதாசி பற்றாக்குறை காரணமாக கடதாசியைப் பயன்படுத்தும் முறைமையை இல்லாதொழித்து டிஜிட்டல் முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.