Posts

மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவலர்கள் அதிகார சபை அதிகாரிகள் விசேட சுற்றி வளைப்பு!

Image
 மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவலர்கள் அதிகார சபை அதிகாரிகள் விசேட சுற்றி வளைப்பு! (எஸ்.எம்.எம்.முர்ஷித்) மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவலர்கள் அதிகார சபை அதிகாரிகள் நேற்று மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் விசேட சுற்றி வளைப்பு மேற்கொண்டிருந்தனர். அந்த வகையில் அரசாங்கத்தினால் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வெள்ளை முட்டை ரூபாய் 43 சிவப்பு முட்டை ரூபாய் 45 அரசாங்கத்தினால் உயர்ந்த பட்ச கட்டுப்பாட்டு விலையாக விதிக்கப்பட்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் அரச கட்டுப்பாட்டு விலைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முட்டைகள் விற்பனை செய்ய படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மாவட்ட அரசாங்க அதிபர் கே கருணாகரன் கிடைத்த முறை பாட்டின் அடிப்படையில் அவரின் வழிகாட்டலின் கீழ் 24. 08.2022 நேற்றைய தினம் மட்டக்களப்பு நகரம் மட்டக்களப்பு சந்தை மற்றும் ஏறாவூர் பிரதேசம் ஏறாவூர் சந்தை விசாரணை சுற்று வளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த வகையில் அரச கட்டுப்பாட்டு விலையிடை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த வி...

கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை அமுல் !

Image
  கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை அமுல் ! வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோர் விரைவில் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வசதியாக குடிவரவு திணைக்களத்தில் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது. நேற்று (23) முதல் இந்த விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இருந்து தமது வெளிநாட்டு தொழில்வாய்ப்பு தொடர்பான கடிதத்தைப் பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரர்கள் அதற்கான தமது ஆரம்பச் செயற்பாடுகளை நிறைவு செய்த பின்னர், இந்த விசேட கருமபீடத்தில் ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலம் தமது கடவுச்சீட்டை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிலைமை புறக்கணிக்கப்படுவதால் பேரழிவு நிலை உருவாகலாம்!-பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

Image
  கொரோனா நிலைமை புறக்கணிக்கப்படுவதால் பேரழிவு நிலை உருவாகலாம்!-பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை நாட்டில் தற்போதைய கொரோனா நிலைமை புறக்கணிக்கப்பட்டு வருவதால், கட்டுப்பாடில்லாமல் கொரோனா வைரஸ் பரவிவருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தடுப்பூசி திட்டத்தால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியால் நோய் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதாகவும், எனினும் எந்த நேரத்திலும் பேரழிவு நிலை உருவாகலாம் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்  உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் கண்டறியப்பட்ட காய்ச்சல், பெரும்பாலும் கொரோனா பாதிப்புக்களாகவே அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த கொரோனா நிலைமை மற்றும் காய்ச்சல் பாதிப்புகளை சுகாதார அமைச்சகம் மற்றும் அரசாங்கம் கருத்தில் கொள்ளவில்லை எனவும் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப் பத்திரம் தொடர்பான முக்கிய தகவல் வெளியானது!

Image
  சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப் பத்திரம் தொடர்பான முக்கிய தகவல் வெளியானது! வாகனம் அல்லாத எரிபொருள் தேவைகளைப் பதிவுசெய்தல் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப் பத்திரம் ஆகியவை செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து வழங்கப்படவுள்ளது. தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு மீளாய்வு கூட்டம் இன்று இணையவழி ஊடாக நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அத்தியாவசிய சேவைகளுக்கான ஒதுக்கீட்டைச் சேர்ப்பதற்கான சிறப்பு வகையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

திருமலையில் மூன்று நாட்களுக்கு நீர் விநியோக தடை!

Image
  திருமலையில் மூன்று நாட்களுக்கு நீர் விநியோக தடை! (ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலையில் மூன்று நாட்களுக்கு குடிநீர் விநியோகம் தடைப்படுவதாக தேசிய நீர் வழங்கள் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 25,26 மற்றும் 27 ஆம் திகதிகளில் திருகோணமலை பிரதேசத்தில் குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது. கந்தளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாகவே குறித்த மூன்று நாட்களுக்கான நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் இரவு வேளைகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீர் விநியோகம் வினியோகிக்கப்பட உள்ளதாகவும் பொதுமக்கள் நீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#PUBG விளையாட்டில் மூழ்கிய மாணவன் தூக்கிட்டு மரணம்; சந்திவெளி பொலிஸ் பிரிவு மாவடிவேம்பில் சம்பவம்.!

Image
 #PUBG விளையாட்டில் மூழ்கிய மாணவன் தூக்கிட்டு மரணம்; சந்திவெளி பொலிஸ் பிரிவு மாவடிவேம்பில் சம்பவம்.! க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேற்றுக்காக காத்திருந்த மாணவன் தூக்கிட்டு மரணித்த சம்பவம் மட்டு - மாவடிவேம்பில் இடம்பெற்றுள்ளது. பரீட்சை எழுதி முடிந்ததும் பெறுபேறு வரும் வரைக்குமுள்ள காலப்பகுதிக்குள் Smart Phone பானையில் மூழ்கியிருந்த இம் மாணவனுக்கு, பெற்றோர் மற்றும் சகோதரர்கள் அறிவுரைகள் கூறியும் கேட்காது தொடர்ந்து அதிலேயே நேரகாலத்தை கழித்து வந்துள்ளார். இரவு வேளைகளில் தனது படுக்கையறைக்குள் சென்று கதவை தாழ்ப்பாளிடும் இவர், எத்தனை மணிக்கு உறங்குகிறார் என்று கூட  தெரியாத நிலையில் காலையில் 10.00 மணிக்குப்பின்பே எழுந்திருப்பார். அவரது அறைக்குள் எவரையுமே உள்ளே வர அனுமதிக்கமாட்டார். சம்பவ தினமான நேற்று முன்தினம் (21) காலை 10.00 மணியாகியும் எழுந்திருக்காத இவரை, இவரது பெற்றோர் கதவில் தட்டி சத்தமிட்டு அழைத்த போதும் எதுவித பதிலும் வராததால் அவரது சகோதரன் வீட்டின் கூரை மேல் ஏறி ஓடுகளை அகற்றி படுக்கையறையினை அவதானித்த போது, "சாறியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு வீட்டு வளையில் தொங்கி...

மாணவனின் சப்பாத்துக்குள் பாம்பு குட்டி! பதறிப்போன பயணிகள் !

Image
  மாணவனின் சப்பாத்துக்குள் பாம்பு குட்டி! பதறிப்போன பயணிகள் ! கொழும்பின் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 13 வயது மாணவன் ஒருவன் அணிந்திருந்த காலணிக்குள் சின்னஞ்சிறு பாம்புக் குட்டி இருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று (23) காலை பாடசாலைக்கு மாணவன், பேருந்தில் வந்து கொண்டிருந்த தனது காலணிக்குள் ஏதோ நெளிவதை உணர்ந்து பாடசாலைக்கு வந்து ஷூவை கழற்றினான். ஷூவுக்குள் குட்டி பாம்பு இருந்ததை கண்டு அனைவரும் பதறிப்போயுள்ளனர். ஆசிரியர்கள் உடனடியாக மாணவனை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பில், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜே.விஜேசூரிய தெரிவிக்கையில் : மாணவனை பாம்பு தீண்டியிருக்கவில்லை என வைத்திய பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . மாணவன் நலமுடன் உள்ளார் என தெரிவித்துள்ளார். இந்த பாம்புக் குட்டி வீட்டில் வைத்து மாணவனின் காலணிக்குள் புகுந்திருக்கலாம் எனவும், மாணவன் அதை கவனிக்காது காலணியை அணிந்து வந்திருக்கலாம் எனவும் தெரிய வருகிறது.. இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாள...