Posts

அமைச்சு பதவிகள் கிடைக்காமையால் அதிருப்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Image
  அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் இதுவரை கிடைக்காதது சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 பேரின் பெயர்கள் பல வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.எனினும் இதுவரை அமைச்சு பதவிகள் கிடைக்காது சம்பந்தமாக அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் அதிருப்தியில் இருப்பதாக கூறபடுகிறது. 30 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களில் 18 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 பேரையே நியமிக்க வேண்டியுள்ளது. பொதுஜன பெரமுன 12 பேரின் பெயர்களை அனுப்பி இருந்தாலும் ஏனைய கட்சிகளுக்கும் சில அமைச்சு பொறுப்புகளை வழங்க வேண்டியுள்ளதால்,பொதுஜன பெரமுனவுக்கான அமைச்சர்களின் எண்ணிக்கை 8 ஆக குறைப்பட வாய்ப்புள்ளது. ஏனைய கட்சிகளில் அங்கம் வகிக்கும் ஏ.எல்.எம் அதாவுல்லா, ஜீவன் தொண்டமான், வஜிர அபேவர்தன, துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிப...

கல்குடா டைவர்ஸ் அணியின் ஏற்பாட்டில் இலவச நீச்சல் பயிற்சி

Image
 கல்குடா டைவர்ஸ் அணியின் ஏற்பாட்டில் இலவச நீச்சல் பயிற்சி  இன்று 24.09.2022 சனிக்கிழமை காயாங்கேணி கடற்கரையில் கல்குடா டைவர்ஸ் அணியில் ஏற்பாட்டில் “ஶ்ரீலங்கா லைப் காட்”  வழிகாட்டலுடன் இளைஞர்களுக்கான இலவச நீச்சல் பயிற்சி நெறி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது  இதன் போது  ஆர்வமுள்ள இளைஞர்கள் நீச்சல் பயிற்சியை கற்றுக் கொள்வதற்காக வருகை தந்திருந்தனர். இந்நிகழ்வு காலை 7:30 தொடக்கம் மதியம் 12.00 மணிவரை இடம் பெற்றது இந்நிகழ்வை அமைப்பின் ஏற்பாட்டாளர்களும் சமூக சேவை உதவியாளர்களுமான நியாஸ் ஹாஜியார், தொழிலதிபர் ஹிப்ஜாத் மற்றும் ஜௌபர் மெக்கானிக் ஆகியோர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் “கல்குடா டைவர்ஸ்” அணியின் விஷேட சுழியோடி அப்துல் மஜீத் ஹலீம் கலந்து கொண்டவர்களுக்கு நீச்சல் பயிற்சிகளை வழங்கினார். பங்குபற்றிய  அனைவருக்கும் நீச்சல் பயிற்சியின் முக்கியத்துவம் அதனால் கிடைக்கும் நன்மைகள் என்பன தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டது. அத்தோடு, அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் இடம்பெறும் நீர் அனர்த்தங்களின் போது நீரில் மூழ்குபவர்களை மீட்கும் பணிகளையும் குறித்த கல்குடா டைவர்ஸ் அணியினர் கள...

போராட்டத்தின் மூலமே ஊழலை நிறுத்த முடியும் – சரத் பொன்சேகா !

Image
  போராட்டத்தின் மூலமே ஊழலை நிறுத்த முடியும் – சரத் பொன்சேகா ! நாடாளுமன்றம் நாட்டுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக நாட்டைச் சிதைக்கச் செய்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மெழுகுவர்த்தியில் இருந்து வானொலி, தொலைக்காட்சி என ஒவ்வொரு பொருளின் விலையும் மிக அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஐஎம்எப் என்று மட்டும் சொல்கிறதே ஒழிய, மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசிடம் தீர்வு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும்போது மக்கள் வீட்டில் தங்கி கதவுகளைத் திறக்க முடியாது எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கரிம உரக் கொள்கையினால் விவசாயியும் நாட்டின் ஒட்டுமொத்த விவசாயமும் அழிந்துவிட்டது என்று கூறிய அவர், கோட்டாபய ராஜபக்ஷவும் கரிமக் கொள்கையினால்தான் வீட்டுக்குச் செல்ல நேரிட்டது என்றும் தெரிவித்துள்ளார். அப்படி இருந்தும் சில மக்கள் பிரதிநிதிகள் வெட்கமின்றி இன்னும...

8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது !

Image
  8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது ! 8 வயது சிறுமியை பல சந்தர்ப்பங்களில் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தாயாரினை இரண்டாவது திருமணம் செய்த கணவரையே கைது செய்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். மொரட்டுவ, ராவத்தவத்தை, பொல்கொடுவ வீதியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் சமிந்த குமார (44) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி மாலை ஆங்கில வகுப்புக்கு சென்றபோது, ​​உடலில் கடுமையான வலி இருப்பதாக ஆங்கில ஆசிரியரிடம் கூறியுள்ளார். அதன்படி, ஆசிரியர் இது குறித்து தாயாரிடம் தெரிவித்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறினார். பின்னர், சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்த தாய், நோய்க்கான காரணங்களை கேட்டறிந்த போது சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (21) மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுகாதாரத் துவாய்களின் விலை அதிகரிப்பால் பாடசாலை மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் : ரோஹினி குமாரி

Image
  சுகாதாரத் துவாய்களின் விலை அதிகரிப்பால் பாடசாலை மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் : ரோஹினி குமாரி சுகாதாரத் துவாய்கள் (Sanitary napkins) ஆடம்பரப் பொருட்களாகக் கருதப்படுவதால், அவற்றுக்கு 42% வரி விதிக்கப்படுவதாகவும், வற் சேர்க்கப்படும் போது, ​​அது சுமார் 45% எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுகாதார துவாய்களின் விலை அதிகரிப்பினால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன் பெண்களின் சுகாதாரம் தொடர்பான அபாயகரமான நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் சுகாதார துவாய்களுக்கு 42% வரி விதிக்கப்பட்டது. அனைத்து வரிகளையும் சேர்த்தால், அது சுமார் 42% ஆகும். வற் இன்னும் கொஞ்சம் அதிகமாக 15% ஆகும்போது, ​​42உடன் 3ஐ சேர்த்து 45 ஆகிவிடும். பாடசாலைகளில் படிக்கும் மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், பெண்களின் ஆரோக்கியத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது ஓர் ஆடம்பரப் பொருளின் வகைக்குள் வந்துள்ளது. எனவே, இதை ஆடம்பர பொருட்கள் பிரிவில் இருந்து நீக்கி, அதன் மீதான வ...

அதிர்ச்சியை ஏற்படுத்தும் இலங்கை குறித்த உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய அறிக்கை !

Image
அதிர்ச்சியை ஏற்படுத்தும் இலங்கை குறித்த உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய அறிக்கை ! இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் அவதிப்படுவதாகவும், இன்னும் இலங்கையில் உள்ள 10 குடும்பங்களில் 8 குடும்பங்கள் உணவைத் தவிர்க்கிறார்கள் அல்லது நெருக்கடியைச் சமாளிக்க கடன் வாங்கி உணவை பெறுவதாகவும் உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய அறிக்கை குறிப்பிடுகிறது பெண் தலைமைத்துவ குடும்பங்களில் இந்த நிலைமை மோசமாக இருப்பதாக உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் நிலவும் உணவு நெருக்கடியானது கிராமப்புற மக்களை விட நகர்ப்புற மற்றும் பெருந்தோட்ட மக்களையே அதிகம் பாதிக்கிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது. அந்த அறிக்கையின்படி, 3.4 மில்லியன் இலங்கையர்களை ஆதரிப்பதற்கு தேவையான 63 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 35 வீதமே கிடைத்துள்ளது. உலக உணவுத் திட்டம் இலங்கையின் சனத்தொகையில் 6.3 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்றவர்களாகவும் குறைந்தது 66,000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்றவர்களாகவும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சுமார் 300 அரச ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளனர் !

Image
  சுமார் 300 அரச ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளனர் ! அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய, சுமார் 300 அரச ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளனர். பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. சில அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு உட்பட்டவர்களே வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் அரச ஊழியர்களுக்கு 05 வருடங்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.