Posts

வடக்கின் காணிப் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பணிப்புரை

Image
  வடக்கின் காணிப் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பணிப்புரை #Harin Fernando #land #Northern Province #Jaffna #Sri Lanka #sri lanka tamil news #Lanka4 வடக்கின் காணிப் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு வடபகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துக் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, பணிப்புரை விடுத்துள்ளார்.   சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாந்து தலைமையில், அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.   இதேவேளை, அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்காக, காணி சீர்திருத்த  ஆணைக்குழுவினால் காணி உரிமைப் பத்திரங்களை வழங்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்துவதற்கு அமைச்சரவை மட்டத்திலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.   இதுவரை வழங்கப்படாதுள்ள காணி உரிமைப் பத்திரங்களை விரைவில் வழங்கி முடிப்பதற்கு ஜனாதிபதி எதிர்பார்த்திருப்பதாகவும், பூர்த்திசெய்யப்பட்...

வடக்கு, கிழக்கு பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் விசேட கூட்டம்

Image
  வடக்கு, கிழக்கு பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் விசேட கூட்டம் #Protest #Jaffna #Colombo #Northern Province #Sri Lanka #sri lanka tamil news #Lanka4 வடக்கு, கிழக்கு பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில், இன்று பௌத்த தரப்பினரால் கொழும்பில் விசேட கூட்டம் ஒன்று நடத்தப்படுகிறது.   'சாசனத்தைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய சிங்கள கூட்டமைப்பின்' ஏற்பாட்டில், கொழும்பு – 07 இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளதாக வட மாகாணத்தின் பிரதான பௌத்த தேரர், கல்கமுவே சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.   வடக்கு, கிழக்கில், பௌத்த மரபுரிமைகள் சேதமாக்கப்படுகின்றதாக குறிப்பிட்ட அவர், அவற்றைப் பாதுகாப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட உள்ளதாக தெரிவித்தார்.   இந்தக் கூட்டத்தில், வடக்கு, கிழக்கு பௌத்த அமைப்புகள், பௌத்த பிக்குகள், பௌத்த அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விற்பனை வெகுவாக குறைவு : எதிர்காலத்தில் QR குறியீடு தேவையில்லை!

Image
  எரிபொருள் விற்பனை வெகுவாக குறைவு : எதிர்காலத்தில் QR குறியீடு தேவையில்லை! எரிபொருள் விநியோகம் செய்பவர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் மாதாந்திர வருமானம் 30% – 40% வரை விற்பனையில் தொடர்ச்சியான குறைவு காரணமாக குறைந்துள்ளது. எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட எரிபொருள் இருப்பு ஓரிரு நாட்களில் தீர்ந்துவிடும் எனவும் தற்போது அதற்கு மூன்று நான்கு நாட்கள் ஆகும் எனவும் ஒன்றியத்தின் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்தார். இந்நிலைமையினால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் அதிக வங்கி வட்டிக்கு பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களை கூட நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்புடன் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள QR குறியீடு காரணமாக எரிபொருள் விற்பனை குறைந்துள்ளதாகவும், ஒரு காருக்கு 80 லீட்டர் பெட்ரோல் பெறுவதற்கு 32,000 ரூபா செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலைமையால் எதிர்காலத்தில் QR குறியீடு தே...

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் குறித்த தேசியக் கொள்கைக்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பிற்கு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் பாராட்டு!

Image
  பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் குறித்த தேசியக் கொள்கைக்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பிற்கு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் பாராட்டு! பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கையை அங்கீகரிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பை ஐக்கிய நாடுகள்  சனத்தொகை  நிதியம் (UNFPA) பாராட்டியுள்ளது. ஜனாதிபதியின் இந்த அர்ப்பணிப்பு, இலங்கையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், உரிமைகள் ஆகியவற்றை உறுதி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக அந்த நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் மதிப்பீட்டு அலுவலகப்  பணிப்பாளர் மார்கோ செகோன் உள்ளிட்ட பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டனர். கொள்கை மற்றும்  நிறுவன மற்றும் தொழில்சார் மட்டங்களில் வலுவான தேசிய மதிப்பீட்டுத் திறன்களை மேம்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள வெற்றிகளுக்கு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் வாழ்த்துத் தெரிவித்தது. குறிப்பாக  அரச துறை  மதிப்பீட்டை ஊ...

சிறுவர் இல்லங்களை கண்காணிக்க நடவடிக்கை :இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு!

Image
  சிறுவர் இல்லங்களை கண்காணிக்க நடவடிக்கை :இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு! அரச மற்றும் தனியார் சிறுவர் இல்லங்களை தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்கான வழிமுறையொன்றை தயாரித்து , அதன் ஊடாக இனங்காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : அண்மையில் ரக்வானை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் 11 வயது சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக செய்திகள் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தன. அந்த செய்திக்கமைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த சிறுவர் இல்லம் தொடர்பில் கண்காணிப்பினை முன்னெடுத்திருந்தது. இதன் போது இனங்காணப்பட்ட காரணிகளுக்கமைய பெற்றோரின் பாதுகாப்பினை இழந்த நிலையில் , இது போன்ற சிறுவர் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று திங்கட்கிழமை (27) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது. இவ்விசேட கலந்துரையா...

தேர்தலுக்கான நிதி தொடர்பில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை : தேர்தல்கள் ஆணைக்குழு !

Image
  தேர்தலுக்கான நிதி தொடர்பில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை : தேர்தல்கள் ஆணைக்குழு ! உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதியை விடுவிப்பது தொடர்பில் நிதி அமைச்சிடம் இருந்து இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சாதகமான பதில் கிடைக்குமென தாம் எதிர்பார்ப்பதாக ஆணைக்குழு கூறியுள்ளது. இதனிடையே, இவ்வாரத்திற்குள் பிரதமருடனான கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் கிடைக்குமென எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஏப்ரல் 04 ஆம் திகதி ஆணைக்குழு கூடி தேர்தல் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த தீர்மானிக்கவுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

1.6 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள், பணத்துடன் கைது!

Image
  1.6 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள், பணத்துடன் கைது! டுபாயில் மறைந்திருந்த ‘ஜில்’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்திவரும் பிரதான நபர் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மற்றும் சுமார் 600,000 ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. . “அவர் இலங்கையிலுள்ள ஓய்வு விடுதியின் முகாமையாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் துனுசின்ஹாவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேக நபரும் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றுள்ளது. சந்தேகநபர் டுபாயில் தலைமறைவாக உள்ள ஜீலின் சகோதரருக்குச் சொந்தமான உல்லாச விடுதியின் முகாமையாளராகக் காட்சியளிப்பதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ஜிலே என்பவர் முல்லேரிய பிரதேசத்தில் ஒரு வருடத்திற்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எனவும், சம...