சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு சன்மான தொகை அதிகரிப்பு!

சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு சன்மான தொகை அதிகரிப்பு! சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை தேடும் நடவடிக்கைகளுக்கு உதவும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அது தொடர்பில் தகவல்களை பெற்றுத் தரும் தரப்பினருக்கு வழங்கப்படும் சன்மான தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் புழக்கத்தில் இருப்பது, இந்த நாட்களில் பல குற்றச் செயல்களுக்கு முக்கிய காரணமாக இருப்பதால் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொது பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் படி, சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை தேடும் நடவடிக்கைகளுக்கு உதவும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தனிநபர் தகவல் வழங்குநர்களுக்கு வழங்கப்படும் சன்மான தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (25) முதல் அடுத்த மாதம் 31ஆம் திகத...