யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு! #Sri Lanka #Jaffna #Food யாழ்ப்பாணத்தில் உள்ள உணவுச்சாலைகள், வெதுப்பக விற்பனை நிலையங்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனினால் முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரத்தினால் நேற்று (28) விசேட ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள உணவுச்சாலைகள், சிற்றுண்டி சாலைகள், வெதுப்பக விற்பனைகள் போன்றவற்றினை ஒழுங்குபடுத்தும் நோக்கோடு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், யாழ்ப்பாண வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள், யாழ்ப்பாண சுற்றுலாதுறை அமைப்பின் பிரதிநிதிகள், மாநகர ஆணையாளர், பிரதேச சபை நகர சபை செயலாளர்கள், உணவுச்சாலை நடத்துபவர்கள் ஆகியோரின் பங்கு பற்றலுடனும் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர்கள் , மாவட்ட உதவிச் செயலாளர் , பிரதேச செயலாளர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடனும் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் க...