போதையில் ஈபிள் கோபுரத்தில் தூங்கிய அமெரிக்க சுற்றுலா பயணிகள்
போதையில் ஈபிள் கோபுரத்தில் தூங்கிய அமெரிக்க சுற்றுலா பயணிகள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருக்கும் ஈபிள் கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க குடும்பத்துடன் வருகிறார்கள். இந்தநிலையில் அமெரிக்காவை சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள், நேற்று முன்தினம் ஈபிள் கோபுரத்தை சுற்றி பார்க்க வந்திருந்தனர். அவர்கள் இருவரும் அன்று இரவு மது அருந்திவிட்டு பாதுகாப்பையும் மீறி, ஈபிள் கோபுரத்தின் உச்சிக்கு சென்று விட்டனர். மது போதையில் இருந்த அவர்கள் திரும்பி வரும் வழியில் அங்கேயே தூங்கி விட்டனர். மறுநாள் காலை 9 மணிக்கு ஈபில் கோபுரத்தை திறக்கும் முன்பு அங்கு வந்த பாதுகாப்பு காவலர்கள் அங்கு 2 பேர் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை எழுப்பி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அமெரிக்கர்கள் என்பதும் அதிக மதுபோதையில் இருந்ததால் அங்கேயே தூங்கியதும் தெரியவந்தது. குடிபோதையில் இருந்த அமெரிக்கர்கள் இரவு 10:40 மணியளவில் நுழைவு டிக்கெட்டுகளை வாங்கி மேலிருந்து கீழே செல்லும் போது பாதுகாப்பு தடைகளைத் தாண்டி கு...