Posts

வவுனியா நகரில் பெண்ணின் சடலம் மீட்பு

Image
வவுனியா நகரில் பெண்ணின் சடலம் மீட்பு வவுனியா குருமன்காடு காளி கோவில் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது இது தொடர்பாக மேலும் தெரியவருவாதவது வவுனியா காளி கோவில் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் 29வயதுடைய ஜெனிற்றா என்ற இளம் குடும்ப பெண் சடலமாக மீட்கப் பட்டுள்ளார் குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் இந்திலையில் கணவருடைய குடும்பத்தினருடன் தனது 7வயது மகனுடன் வசித்து வந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது இதேவேளை குறித்த பெண் கடந்த வாரமும் தனது மகனுடன் கிணற்றில் வீழ்ந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் சத்தம் கேட்டு அயலவர்கள் மீட்டெடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது குறித்த சம்பவம் தொடர்பான மரணவிசாரனையை திடீர் மரண விசாரனை அதிகாரி சுரேந்திர சேகரன் அவர்கள் மேற்கொண்டு வருவதுடன் வவுனியா பொலிஸாரும் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்

நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் வாகன தண்டப்பணத்தை செலுத்தும் வசதியை ஏற்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Image
நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் வாகன தண்டப்பணத்தை செலுத்தும் வசதியை ஏற்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. மேல்மாகாணத்தில் தற்போது இரவு பணிகளில் இயங்கும் தபால் நிலையங்களில் தண்டப்பணத்தை செலுத்தும் வசதி மேற்கொள்ளப்பட்டமையின் வெற்றியின் அடிப்படையில் ஏனைய மாகாணங்களிலும் இரவில் செயல்படும் தபால் நிலையங்களில் தண்டப்பணம் செலுத்த வசதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத இறுதிக்குள் இதற்கான வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அம்பாறை -கல்முனை பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை

Image
அம்பாறை -கல்முனை பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை (பாறுக் ஷிஹான்) சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக பொலிஸாரினால் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களையும் ஆபத்தான போதைப்பொருட்களை கடத்துவதையும் தடுப்பது மிகவும் அவசியமான நோக்கமாக யுக்திய பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சோதனை நடவடிக்கையானது வெள்ளிக்கிழமை(12) மாலை முதல் நள்ளிரவு வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி மற்றும் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி ஊடாக போக்குவரத்தில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் பல இடங்களிலும் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்குரிய தொலைபேசி இலங்கங்கள் எழுதப்பட்ட ஸ்டிக்கர்களும் பேருந்துகளில் பொலிஸாரால் ஒட்டப்பட்டன. இப்பரிசோதனை நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம ஆலோசனைக்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிகாட்டலில் கல்முனை தலைமையக ப...

பதுரியா நகர் அஸ்-ஸபா முன்பள்ளியின் 23வது மாணவர் வெளியேற்று விழாவும் கெளரவிப்பு நிகழ்வும்

Image
பதுரியா நகர் அஸ்-ஸபா முன்பள்ளியின் 23வது மாணவர் வெளியேற்று விழாவும் கெளரவிப்பு நிகழ்வும் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் பதுரியா நகர் அஸ்-ஸபா முன்பள்ளியின் 23வது மாணவர் வெளியேற்று விழாவும் கெளரவிப்பு நிகழ்வும் நேற்று (2024.01.04) மாலை மீராவோடை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. பதுரியா நகர் சன சமூக நிலையத்தின் தலைவர் எம்.பீ.முபாறக் (அதிபர்) தலைமையில் ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் அவர்களின் ஒருங்கிணைப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.எம்.நெளபர், கல்குடா அக்கீல் அவசர உதவிச்சேவை பிரிவின் தலைவர் எம்.ஏ.சீ.நியாஸ் மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேசத்தின் முக்கிய பிரமுகர் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் புதிய மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் அவர்களின் உயர்தரமான அர...

முகநூலில் பெண் போல பேசி, நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது..!

Image
முகநூலில் பெண் போல பேசி, நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது..! முகநூலில் பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணம் - நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் பெண் போல பழகி காதல் வலையில் வீழ்த்தி நெல்லியடிக்கு வரவழைத்துள்ளார். இதனை நம்பி நெல்லியடிக்கு வந்த திருகோணமலை வாசியை கத்தி முனையில் அச்சுறுத்தி பணம் உடைமைகள் என்பன இருவரால் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தார். விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இருவரை கைது செய்ததுடன் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம் உடமைகளையும் மீட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நீர் கட்டணம் அதிகரிப்பு...!

Image
நீர் கட்டணம் அதிகரிப்பு...! தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தகவலின்படி, ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படும் VAT திருத்தத்தின் காரணமாக நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும். அதன் வர்த்தகப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பியால் பத்மநாத இதனைத் தெரிவித்தார். இதன் காரணமாக நீர் கட்டணம் 03 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

காவத்தமுனை உதவும் உள்ளங்களின் வருடாந்த ஒன்றுகூடலும் எதிர்காலத்திட்டங்கள் மீளாய்வுக்கூட்டமும்

Image
காவத்தமுனை உதவும் உள்ளங்களின் வருடாந்த ஒன்றுகூடலும் எதிர்காலத்திட்டங்கள் மீளாய்வுக்கூட்டமும் காவத்தமுனை உதவும் உள்ளங்கள் அமைப்பின் 4 வருட பூர்த்தியை முன்னிட்டு அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் இதுவரையில் எம்மோடு இணைந்து தூய பணியில் கைகோர்த்துக்கொண்டு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பல வகையிலும் உதவி, ஒத்தாசை, ஒத்துழைப்பினை நல்கி வரும் தனவந்தர்களுக்கான ஒன்றுகூடல் கடந்த 07.12.2023ம் திகதி அமைப்பின் அலுவலகத்தில் தலைவர் M.A.அஸ்மீர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது அமைப்பினுடைய வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு, கற்றல் உபகரணங்கள் வழங்கும் பிரதான திட்டம் பற்றியும் எதிர்வருகின்ற 2024ம் ஆண்டு அதனை வழங்கி வைப்பது சம்பந்தமாகவும் பேசப்பட்டது. நிகழ்வில் வருகை தந்திருந்த அமைப்பின் தனவந்தர்களினால் ஆக்கபூர்வமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதோடு, அமைப்பின் செயற்பாடுகளை எதிர்காலத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களும் முன்மொழியப்பட்டன. குறித்த நிகழ்வில் பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர்கள், ஏனைய சங்கங்கள், கழகங்களின் நிர்வாகத்தினர், வியாபாரதள உரிமையாளர்கள் மற்றும் கல்வ...