காவத்தமுனை உதவும் உள்ளங்களின் வருடாந்த ஒன்றுகூடலும் எதிர்காலத்திட்டங்கள் மீளாய்வுக்கூட்டமும்
காவத்தமுனை உதவும் உள்ளங்களின் வருடாந்த ஒன்றுகூடலும் எதிர்காலத்திட்டங்கள் மீளாய்வுக்கூட்டமும்
காவத்தமுனை உதவும் உள்ளங்கள் அமைப்பின் 4 வருட பூர்த்தியை முன்னிட்டு அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் இதுவரையில் எம்மோடு இணைந்து தூய பணியில் கைகோர்த்துக்கொண்டு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பல வகையிலும் உதவி, ஒத்தாசை, ஒத்துழைப்பினை நல்கி வரும் தனவந்தர்களுக்கான ஒன்றுகூடல் கடந்த 07.12.2023ம் திகதி அமைப்பின் அலுவலகத்தில் தலைவர் M.A.அஸ்மீர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது அமைப்பினுடைய வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு, கற்றல் உபகரணங்கள் வழங்கும் பிரதான திட்டம் பற்றியும் எதிர்வருகின்ற 2024ம் ஆண்டு அதனை வழங்கி வைப்பது சம்பந்தமாகவும் பேசப்பட்டது.
நிகழ்வில் வருகை தந்திருந்த அமைப்பின் தனவந்தர்களினால் ஆக்கபூர்வமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதோடு, அமைப்பின் செயற்பாடுகளை எதிர்காலத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களும் முன்மொழியப்பட்டன.
குறித்த நிகழ்வில் பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர்கள், ஏனைய சங்கங்கள், கழகங்களின் நிர்வாகத்தினர், வியாபாரதள உரிமையாளர்கள் மற்றும் கல்விமான்கள், புத்திஜீவிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.









Comments
Post a Comment