Posts

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் அறிவிப்பு !

Image
  ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் அறிவிப்பு ! ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. முதலில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் எனவும் நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு பாராளுமன்றில் இரங்கல் !

Image
  ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு பாராளுமன்றில் இரங்கல் ! ஈரான் ஜனாதிபதி மொஹமட் இப்ராஹிம் ரைஸியின் திடீர் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று (22) பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். இந்த பிரேரணையை முன்வைத்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதாக தெரிவித்தார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இறுதி வெளிநாட்டு அரச தலைவர் ஈரான் ஜனாதிபதி என்பதையும் ரணதுங்க நினைவு கூர்ந்தார். உமா ஓயா திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் ஆதரவை வழங்கியதை நினைவுகூர்ந்த அமைச்சர், ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி தனது அனுதாபத்தை தெரிவிக்க முன்வந்தார். அதன்படி, சபாநாயகர் உட்பட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அமைச்சர்கள் இருக்கையில் இருந்து எழுந்து ஒரு நிமிடம் மெளனமாக இருந்து அஞ்சலி செலுத்தியதையடுத்து, சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகியன. இதேவ...

சபாநாயகருக்கும் தென் கொரியா ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவருக்குமிடையில் சந்திப்பு !

Image
  சபாநாயகருக்கும் தென் கொரியா ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவருக்குமிடையில் சந்திப்பு ! தென் கொரியாவின் ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவரும் செயலாளர் நாயகமுமான சுங் சியுங்-யுன் (Chung Seung-yun) தலைமையிலான உயர் அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவினருக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்குமிடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கருத்துத் தெரிவித்த சுங் சியுங்-யுன், கடந்த வருடம் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சட்டம் மிகவும் பலம் வாய்ந்த சட்டம் என்றும், இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு தென் கொரியாவில் நடைமுறைப்படுத்தப்படும் பொது நிறுவங்களுக்கான ஒருமைப்பாடு மதிப்பீட்டு முறைமையை (Integrity Assessment System) இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதன் போது கருத்துத்தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இலங்கையில் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டம் முற்றுமுழுதாக சுயாதீனமானது எனவும் அதன் மூலம் இலஞ்சம் ம...

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது !

Image
  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது ! உறுவ, ஒமரகடவல பிரதேசத்தில் நபர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை (20) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் உறுவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடையவர் ஆவார் . சந்தேக நபர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக பதவிய பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றைய நாணய மாற்று விகிதம் !

Image
  இன்றைய நாணய மாற்று விகிதம் ! இன்று செவ்வாய்க்கிழமை (மே 21) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 294.7827 ஆகவும் விற்பனை விலை ரூபா 304.3151 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று திரும்பிய பஸ் விபத்து; 6 பேர் காயம் !

Image
  வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று திரும்பிய பஸ் விபத்து; 6 பேர் காயம் ! யாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்று, மீண்டும் யாழ் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பஸ் பூநகரி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று (21) நடைபெற்ற விசாக பொங்கலுக்கு , யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் இருந்து வாடகைக்கு பஸ் ஒன்றினை ஒழுங்கு செய்து பக்தர்கள் சென்றிருந்தனர். பொங்கல் திருவிழாவை முடித்துக்கொண்டு , இன்று (21) மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த வேளை பூநகரி , சங்குப்பிட்டி பாலத்தை அண்மித்த பகுதியில் பஸ் வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதில் பஸ்ஸில் பயணித்த 6 பேர் காயமடைந்த நிலையில் பூநகரி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஒரு கோடி வாக்குகளை அதிகமாக பெற்று ரணில் வெற்றி பெறுவார் : மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் எஸ்.சுதர்சன் !

Image
  ஒரு கோடி வாக்குகளை அதிகமாக பெற்று ரணில் வெற்றி பெறுவார் : மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் எஸ்.சுதர்சன் ! இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதிகள் எடுத்த வாக்குகளின் தொகையை விட அதிகமாக ஒரு கோடி வாக்குகளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சி தலைவரும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெறுவார் என ஜக்கிய தேசிய கட்சி மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் எஸ்.சுதர்சன் தெரிவித்தார். ஜக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு, மண்முனைபற்று பிரதேச அமைப்பாளர் ஏ.ரி. முகமட் அஸ்மியின் வலயக்காரியாலய திறப்பு விழா நேற்று (20) மாலை பாலமுனையில் இடம்பெற்றது இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் எஸ்.சுதர்சன் நாடாவை வெட்டி காரியாலயத்தை திறந்துவைத்த பின்னர் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜ.தே.கட்சி கடந்த வருடம் ஏப்ரல் முதலாம் திகதி புனரமைப்பு பணி ஆரம்பிக்கப்பட்டது அதன் அடிப்படையில் கட்சி செயலாளர் நாடளாவிய ரீதியில் 153 தொகுதிகளில் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்தது. இந்த தொகுதிவாரிய...